நயன்தாரா - விக்னேஷ் சிவனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.


கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராகக் கொண்டடப்படும் நயன்தாரா கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் தன் நீண்ட நாள் காதலருமான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டதுடன் வாடைகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார்.


கோலிவுட்டின் காதல் பறவைகள்


உயிர். உலகம் எனக் குழந்தைகளுக்குப் பெயரிட்டு தங்கள் பெர்சனல் பக்கங்களை அவ்வளவாக வெளிப்படுத்தாமல், மீடியா வெளிச்சமின்றி தன் குழந்தைகளை வளர்த்து வருகின்றனர் நயன் தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர்.


குடும்ப வாழ்வில் நுழைந்தபோதும், தங்கள் சினிமா பயணத்தையும் தெளிவாகத் திட்டமிட்டு இருவரும் பயணித்து வரும் நிலையில், இவர்களது புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன்.


அந்த வகையில் நேற்று வெள்ளை டி- ஷர்ட் டெனிம் டிஷர்ட் அணிந்தபடி நோ மேக் - அப் லுக்கில் நயன் தாராவும், அவருடன் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கைக்கோர்த்தபடி நடந்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


கணவருடன் ஜவான் ஷூட்டிங்


ஜவான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புக்காக தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா தற்போது மும்பை சென்றுள்ள நிலையில், அங்கு இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 


 






முன்னதாக பொதுவெளியில் மீடியாக்கள் வெளிச்சத்தில் வருவதை நயந்தாரா பெரும்பாலும் தவிர்த்தே வந்துள்ளார். இந்நிலையில், திருமணத்துக்குப் பின் பொது நிகழ்வுகளில் முன்பைவிட கொஞ்சம் அதிகமாகக் கண்ணில்படும் நயன்தாரா, முன்னதாக கனெக்ட் பட ப்ரொமோஷன்களின்போது இதேபோல் விக்னேஷ் சிவனுடன் பொது நிகழ்வுகளுக்கு வலம் வந்து லைக்ஸ் அள்ளினார்.


பல ஆண்டுகள் தென்ன்ந்திய சினிமாக்களில் கோலோச்சிய பின் தற்போது ஷாருக்கான் உடன் அட்லி இயக்கத்தில்  ஜவான் படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அதிரடி எண்ட்ரி தர உள்ளார்.


மற்றொருபுறம் அஜித்தின் அடுத்தபடமான ஏகே 62வை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த நிலையில், அந்தப் படத்திலிருந்து அவர் விலகியது இணையத்தில் பேசுபொருளானது. தொடர்ந்து தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


ஜவான்


ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் ஜவான் படத்தைத் தயாரிக்கும் நிலையில், ஷாருக் - நயன் தாராவுடன் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் மிக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். வரும் ஜூன் 2ஆம் தேதி ஜவான் வெளியாகும் என ஏற்கெனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது பட ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.