மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினரால் மாவட்டம் முழுவதும் கடந்த அக்டோபர் 21  மற்றும் அக்டோபர் 22 ஆகிய இரு தினங்களில் சட்ட விரோதமாக மண் கடத்துவோர், கள்ள சாராயம் விற்பனை செய்வோர், தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட், கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வோர். சூதாட்டங்களில் ஈடுபடும் நபர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மற்றும் பிடிகட்டளை குற்றவாளிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில்  மணல்மேடு, சீர்காழி, ஆணைக்காரன்சத்திரம் ஆகிய காவல் நிலைய சரகங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேர் மீதும், மணல்மேடு, பூம்புகார், ஆணைக்காரன்சத்திரம் ஆகிய காவல்நிலய சரகங்களில் சூதாட்டங்களில் ஈடுபட்ட 20 நபர்கள் மீது 06 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


20 years of Pithamagan: சித்தனாக கலக்கிய விக்ரம்.. காமெடியில் அசத்திய சூர்யா.. “பிதாமகன்” வெளியான நாள் இன்று..!




மேலும் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். மணல்மேடு காவல் நிலைய சரகத்தில் இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் கடந்தலில் ஈடுபட்ட இருவர் மீதும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் சட்ட விரோதமாக குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 57 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  சட்டவிரோதமாக கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 32 பேர், இரண்டு பிடிகட்டளை குற்றவாளிகள் கைது செய்யபட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் கடந்த இருதினங்களில் சாலை விதிகளை பின்பற்றாத நபர்கள் மீது 1070 வழக்குகளும், குடிபோதையில் வாகனம் ஒட்டியவர்கள் மீது 54 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Wasim Slams Pakistan: ”தினமும் ஆளுக்கு 8 கிலோ ஆட்டு கறி; உடற்தகுதி எங்கே?” - பாகிஸ்தான் வீரர்களை சாடிய வாசிம் அக்ரம்




இந்த அதிரடி நடவடிக்கை மூலம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்ட விரோத செயல்களுக்கு எதிரான சிறப்பு வேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் எனவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றிய தகவல்களை 8438456100 என்ற வாட்சப் எண்ணிலும், 9442626792 என்ற செல்பேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் எனவும், தகவல் அளிப்பவர்களின் விபரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


Leo box office collections Day 5: இந்தியாவில் தாறுமாறு வசூல்.. 5 நாட்களில் லியோ படத்தின் வசூல் என்ன தெரியுமா?