தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டதால் ஒரு வருடம் கூட கடக்காத நிலையில் சிமெண்ட் சாலை சல்லி சல்லியாக நொறுங்கியது.

 

அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை 

 

2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் கரையோரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காஞ்சிபுரம் அடுத்த கீழ் கதிர்ப்பூர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் 2017ம் ஆண்டு 200 கோடி செலவில் 2112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்று பெரும்பாலானோர் இந்த குடியிருப்புகளில் இன்னும் குடியேறாமல் இருந்து வருகின்றனர்.



 

குடியிருப்புக்குள் கண்டெய்னர் லாரி 

 

இந்த நிலையில் மாநில நிதிக்குழு மான்யத்தில் 2022-23 ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்கதிர்பூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறை சார்பில் அடுக்கு மாடி குடியிருப்புக்கு செல்ல 5 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. குடியிருப்புக்குள் கன்டெய்னர் லாரி ஒன்று சென்றபோது அடுக்குமாடி குடியிருப்பு நுழைவுப் பகுதியில் சிமெண்ட் சாலை முழுவதுமாக சேதம் அடைந்து லாரியின் பின் புறம் உள்ள எட்டு சக்கரமும் சிமெண்ட் சாலையில் சிக்கிக்கொண்டது.



 

ஒரு வருடம் கூட கடக்காத நிலையில்

 

5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு ஒரு வருடம் கூட கடக்காத நிலையில் சாலை சேதமடைந்ததுள்ளது. தரமற்ற முறையில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதால் சாலை சேதமாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர். இந்த நிலையில் சேதம் அடைந்த சிமெண்ட் சாலையை சீரமைத்து தரமான சாலை அமைத்து தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



 

 

இது குறித்து மாவட்ட திட்ட அலுவலர் செல்வக்குமாரிடம் தொடர்பு தொடர்பு கொண்டு கேட்டதற்கு, துகுறித்து பொறியாளர் ஆய்வு செய்து சாலை சம்பந்தமான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


 



Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!



உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா? கவலையே வேண்டாம். 




சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை,  நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம். நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்