தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளதோ அந்த அளவுக்கு அதன் பயன்கள் காட்டிலும் தீமைகளும் சரி சமமாகவே இருந்து வருகிறது. மேலும் இணைய உலகில் 2ஜி, 3ஜி, 4ஜி என பரிமாண வளர்ச்சி தற்போது 5 ஜி என வேகம் எடுத்து வருகிறது. இந்த வளர்ச்சி சமூக வலைதளங்களிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, என பாகுபாடு இன்றி மாணவ, மாணவிகள் சமூக வலைதளங்களில் அடிமையாகி, இதன் மூலம் எளிதில் காதல் வயப்படுவதும், பலர் ஏமாற்ற பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகுவதும் தொடர்ந்து கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பள்ளி, கல்லூரி என பல விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு அளித்தாலும், இதுபோன்று ஏமாறும் எண்ணிக்கையும் குறைந்தபாடு இல்லை. அதுபோன்று சமூக வலைதள மூலம் பள்ளி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் நடந்தேறி உள்ளது.
சீர்காழி அருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன் மாயமான மாணவியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மாணவியை கடத்திச் சென்றதாக இளைஞர் ஒருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா புதுப்பட்டினம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 11 ஆம் தேதி மாயமாகியுள்ளார். இதனை அடுத்து பதறிப் போன மாணவியின் தாயார் இதுகுறித்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகள் காணமால் போனதாக புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட வந்த மாணவியை பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தேடி வந்தனர். விசாரணையில் இளைஞர் ஒருவர் சீர்காழியில் கடத்தி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம் வானரபட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் 24 வயதான மகன் சதீஷ்குமார் என்ற இளைஞர் பள்ளி மாணவியை கடத்தியது தெரியவந்துள்ளது. சதீஷ்குமார் ஸ்னாப் ஷாட் ( snachat ) ஆப் மூலம் பழகி மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளைஞர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு மனநல ஆலோசனை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்