காரைக்காலுக்கு படையெடுக்கும் மயிலாடுதுறை குடிமகன்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தின் வழியாக காரைக்காலுக்கு படையெடுக்கும் குடிமகன்களால் மாவட்டத்தில் மேலும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது சில நாட்களாக மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பொதுமுடக்கத்தில் தமிழ்நாடு அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று குறையாத காரணத்தால் ஒருசில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement


இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அண்மையில் திறக்கப்பட்டது. இதனை அடுத்து அண்டை மாவட்டங்களில் இருந்து புதுச்சேரி மாவட்டத்திற்கு மது வாங்க குடிமகன்கள் குவிந்து வருகின்றனர். அவ்வகையில், புதுச்சேரி மாநிலத்துக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்துக்கு தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் வழியாக குடிமகன்கள் சாரை சாரையாக இருசக்கர வாகனங்களில் படையெடுத்து வருகின்றனர். 


மயிலாடுதுறை - காரைக்கால் எல்லையான நல்லாத்தூரில் மதுவாங்க மாவட்ட எல்லைக்கு 2 கிலோமீட்டர் முன்பாகவே இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, ஆற்றின் வழியாக நடந்து சென்று மதுவாங்கிச் செல்கின்றனர். சோதனைச்சாவடியில் காவல்துறையினர் கெடுபிடி காட்டி, இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தாலும், குடிமகன்களில் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலையே நிலவி வருகிறது. இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படாததால் இந்த மாவட்டத்திலிருந்து மதுப்பிரியர்கள் மதுவாங்க காரைக்காலுக்கு படையெடுப்பது தொடரும் என்பதால், சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்தி, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் தொற்று அதிகமாக உள்ள மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும், இதனால் தொற்று குறைய சிறிதளவும் வாய்பில்லை என்பதால் புதுச்சேரி மாநில அரசுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழையும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை அத்தியாவசிய தேவை இன்றி மது வாங்கும் நோக்கில் வருபவர்களை அனுமதிக்க கூடாது என்றும், மதுக்கடைகளுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மது வழங்க கூடாது என உத்தரவை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏராளமான மதுபாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை நடைபெற்று வரும் இந்த சூழலில் மதுவிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் இன்றி வரும் மது பிரியர்கள் போன்றவர்களால் தான் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது என்ற பேச்சுக்கு இதன்போன்ற சம்பவங்களை சாட்சியாக அமைகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola