மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த வாணாதிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் பிரகாஷ். இவர் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். குத்தாலத்தில் பிரகாஷ் மனைவி மதுமிதா மட்டும் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி மதுமிதா பிரசவத்துக்காக அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளதால் பிரகாஷின் தந்தை ராமகிருஷ்ணன் அவ்வப்போது வந்து வீட்டை பார்த்து சென்று வந்துள்ளார்.
கடைசியாக நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த ராமகிருஷ்ணன் பின்னர் வீட்டை பூட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் அவர் வந்தபோது வீட்டின் கிரில் கதவு மற்றும் முன்பக்க கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பூஜையறை உடைக்கப்பட்டு உள்ளே மர பீரோவில் வைத்திருந்த 54 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 21 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து ராமகிருஷ்ணன் குத்தாலம் காவல் நிலையத்தில் கொள்ளை சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார். தொடர்ந்து மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மற்றும் குத்தாலம் காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி, அதன் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பிரதான சாலைப் பகுதியில் அமைந்துள்ள அவ்வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
அதிபத்த நாயனாரின் முக்தி.. சிவனுக்கு தங்க, வெள்ளி மீன் அர்ப்பணிப்பு.. நாகையில் விநோத திருவிழா!
மயிலாடுதுறை அருகே பல ஆண்டுகளாக போடப்படாத வைகல்-பழிஞ்சநல்லூர் சாலையை விரைந்து அமைத்துத்தர கிராமமக்கள் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் சுமார் 1500 மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வைகல் கிராமத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் பழிஞ்சநல்லூர் கிராமத்துக்குச் செல்லும் சாலையானது மிகவும் மோசமான நிலைமையில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக நடந்து செல்பவர்கள், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
KBC 14: கணவருக்கு ஒரு ரூபாய் கூட தரமாட்டேன்..குரோர்பதி நிகழ்ச்சியில் அமிதாப்பை அதிர வைத்த பெண்
இப்பகுதி மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய இரண்டு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், அங்கு யார் சாலை வசதி ஏற்படுத்தித்தருவது என்ற குழப்பத்திலேயே கடந்த 15 ஆண்டுகளாக அங்கு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனை அரசு கவனத்தில் கொண்டு, பல ஆண்டுகளாக போடப்படாத வைகல்-பழிஞ்சநல்லூர் சாலையை விரைந்து அமைத்துத்தர அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.