மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அரசூர் கீழத் தெருவை சேர்ந்தவர் சபாபதி என்பவரின் மகன் 21 வயதான சஞ்சய்.  இவர் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு சிறுமியிடம் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டிற்கு சஞ்சய் அழைத்து சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். 




அதனை  பயன்படுத்தி சஞ்சய், அந்த  சிறுமியிடம் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து அடிக்கடி வீட்டில் யாரும் இல்லாத சமயங்களை  சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


TN 10th, 11th & 12th Public Exams: 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை.. எந்த தேதியில் என்ன பாடம்? முழு விவரம் இதோ..




இதனை கேட்ட அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவல்லி மற்றும் காவல்துறை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தகாத உறவில் ஈடுபட்ட இளைஞர் சஞ்சய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Victoria Gowri: முடிவுக்கு வந்த சர்ச்சை.. உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி.. கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கௌரி!