கர்நாடகாவில் ஒரு டாக்டர் பெண்கள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. இதனைத்தொடர்ந்து, மங்களூரு காவல் துறையினர் பணியிடத்தில் தனது சக பெண் ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அரசு மருத்துவரை கைது செய்தனர்.
அந்த டாக்டர், மங்களூர் மாவட்ட தொழுநோய் துறையின் தலைவர் டாக்டர் ரத்னாகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒரு பெண் அமைப்பின் பிரதிநிதியால் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர் ரத்னாகர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவுப்படி டாக்டர் ரத்னாகர் போலீஸ் காவலில் உள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் என்.சஷி குமார் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க: உன் ஆபாச படங்கள் என்னிடம்..பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய குடும்ப நண்பர்.. விசாரணையில் திடுக்!
அந்த டாக்டர், சக பெண் பணியாளர்களை குந்தாப்பூர், முருதேஷ்வர், மடிகேரி மற்றும் பிரியாபட்னா போன்ற பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை, டாக்டர் பணிப் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோக்களின் அடிப்படையில், குறைந்தது எட்டு ஊழியர்கள் டாக்டரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் டாக்டருக்கு எதிராக புகார் அளிக்க தயாராக இல்லை என்றும் அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதாகக் கூறினர். மேலும் படிக்க: அபார்ட்மெண்ட் மாடியில் ஆடையின்றி கிடந்த இளம் பெண்ணின் உடல் - அதிர்ச்சியடைந்த இளைஞர்கள்.!
சில மாதங்களுக்கு முன்பு, தேசிய மகளிர் ஆணையத்திற்கு வந்த பெயர் தெரியாத கடிதத்தின் அடிப்படையில் மங்களூர் போலீசார் விசாரணை நடத்தினர். டாக்டர் ரத்னாகரின் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அநாகரீகமாக நடந்து கொண்டதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தங்களின் ஆரம்பகட்ட விசாரணையின் போது டாக்டர் ரத்னாகரின் தவறான நடத்தை, துன்புறுத்தல் ஆகியவற்றை அவர்கள் கவனித்ததாகக் கூறி, மகளிர் ஆணையத்திற்kஉ காவல்துறையால் ஒரு அறிக்கை அனுப்பப்பட்டது. டாக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டால் அவர் மீது புகார் அளிக்குமாறும் பாதிக்கப்பட்டவர்களை போலீசார் கேட்டுக் கொண்டனர்.
மேலும், பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்