பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக அவர்களுக்கு தெரிந்த நபர்களே தான் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. நில தகராறு காரணமாக 25-வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நில தகராறு
நாக்பூர் நகரில் நில தகராறு காரணமாக பெண் ஒருவரை கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராம்பார்க் ஏரியாவில் புதிதாக வீடு கட்டுவதற்காக பக்கத்து வீட்டு பெண்ணுடன் எழுந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த நபர், அப்பெண்ணை அவரின் தாய் கண்முன்னே கொலை செய்துள்ளார். அந்நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் விசாரணையில், கைது செய்யப்பட நபர் புதிதாக வீடு கட்டி வருவதாகவும், அதற்காக பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் இடத்தையும் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், அப்பெண் இடத்தை தர மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த நபர், பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். எல்லை மீறிய மோதலில் கைது செய்யப்பட்ட நபர், அப்பெண்ணை குத்திவிட்டார்.
உயிரிழந்தவர் ஆர்த்தி நிக்கோலஸ் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இவர் தன் கணவனைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
கணவன் - மனைவி மோதல்
மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தின் விகார் பகுதியில் 60 வயதுள்ள மாமியாரை கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விகார் பகுதியில் உள்ள குடும்பத்தில் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சனை தொடர்ந்துள்ளது. இருவருக்கும் இடையே பல முறை பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் வீட்டில் சண்டை நிகழ்ந்துள்ளது. அப்போது பெண்ணுடைய தாயார் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். கணவனுக்கு ஏற்பட்ட கோபத்தில், மாமியாரை கூர்மையான கருவியை கொண்டு குத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மாமியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதீத கோபத்தில் மாமியாரை கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதிகரிக்கும் குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்துக்கு சுமார் 31 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே அதிமாகும். கடந்த 2014ல் 30,906 புகார்கள் மகளிர் ஆணையத்தில் பதிவாகி உள்ளது. நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் 16,876 புகார்கள் கிடைக்கப் பெற்றன. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 3,004 புகார்கள் கிடைக்க பெற்றன. மூன்றாவது இடமாக மகாராஷ்ராவில் 1,381 புகார்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க..
கரூர்: மேட்டுப்பட்டி பிரிவு அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு