தொடர்ந்து, வேலைக்கு போக சொல்லி வற்புறுத்தியதால் மனைவியை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்து விட்டு, கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

இந்த சம்பவம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நிகழ்ந்தது. கொலை சம்பவத்தை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

வெள்ளியன்று ஜபல்பூரில் உள்ள வீட்டில், 30 வயது மதிக்கதக்க விபர் சாஹூ இறந்த நிலையிலும், அவரது மனைவி ரித்து ரத்த வெள்ளத்திலும் கிடந்துள்ளனர்.

Continues below advertisement

தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

இதுகுறித்து விரிவாக பேசிய ராஞ்சி காவல்துறை பொறுப்பாளர்  சஹ்தேவ்ராம் சாஹு, "சம்பவத்தின் போது விபோர் சாஹுவின் தாயும் சகோதரரும் மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியே சென்றிருந்தனர். வீடு திரும்பும் போது தம்பதியினர் இறந்து கிடந்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், டிரைவராக இருந்த விபோர் சாஹு கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் மனம் உடைந்த மனைவி, வேலைக்குச் சென்று சம்பாதித்து வருமாறு பலமுறை அவரிடம் கூறினார். 

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை : கீழடி அருங்காட்சியக பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும் - அமைச்சர் எ.வ வேலு

கடும் வாக்குவாதத்திற்கு பிறகு, மனைவியை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

வேலைக்கு போக சொல்லி வற்புறுத்திய மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?

(தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல.

மன அழுத்தம் ஏற்பட்டாலோதற்கொலை எண்ணம் உண்டானாலோஅதனை மாற்றகீழ்காணும் எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050)

இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண