Crime: மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் பெற்ற மகளையே தந்தை கொடூரமாக கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மார்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசிராஜு வெங்கடேஷ்வர்லு. இவரது மனைவி நரசம்மா. இவர்களுக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். வெங்கடேஷ்வர்லு மது, போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, எப்போதும் மனைவி நரசம்மாவுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் மனைவி நரசம்மா, தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார். கடந்த 21-ஆம் தேதி மார்கொண்டாபுரதில் படித்த தன் மகள் மஞ்சுளாவை வீட்டிற்கு  அழைத்து வர நரசம்மா சென்றுள்ளார்.


நரசம்மா பள்ளிக்கு சென்றபோது மகள் மஞ்சுளாவை அவரது தந்தை அழைத்து சென்றதாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.  இதனால் பதற்றமான நரசம்மா, அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் 13 வயது சிறுமி மஞ்சுளாவை யாரும் இல்லாத கல்மேட்டுப் பகுதியில், அழைத்து சென்ற தந்தை வெங்கடேஷ்வர்லு அங்கு மகளையே கொடூரமாக கொலை செய்துள்ளார். கடைசியில் தன்னுடைய கணவர் இருப்பிடத்தை தேடி சென்ற நரசம்மா, அங்கே மகள் சடலமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன், குழந்தையை கொலை செய்து விடுவேன் என்று கணவர் மிரட்டியதாக அவர் கூறியிருக்கிறார்.


இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடந்திய விசாரணையில் பள்ளியில் இருந்து மஞ்சுளாவை அவரது தந்தை வெங்கடேஸ்வர்லு அழைத்து செல்வது அங்கிருந்த சிசிடிவி மேராவில் பதிவாகி இருந்தது. இதனால் குழந்தை மஞ்சுளாவை கொலை செய்தது தந்தை வெங்கடேஸ்வர்லு என்பது உறுதியானது. இதனை அடுத்து வெங்கடேஸ்வரலுவை போலீசார் கைது செய்துள்ளனர். 


இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”தன் அம்மாவுடன் எப்போதும் சண்டைபோடும் அப்பா, திடீரென மனம் திருந்தி பள்ளிக்கு தன்னை அழைக்க வந்ததால் சந்தோஷத்தில் அவருடன் சென்றுள்ளார் குழந்தை மஞ்சுளா. ஆனால் மகளை அழைத்து செல்ல அவரிடம் பணம் இல்லை. இதனால் குழந்தை மஞ்சுளா வைத்திருந்த 40 ரூபாயை ஆட்டோ ஓட்டுநருக்கு கொடுத்து சென்றுள்ளார். ஆனால் அங்கு குழந்தை மஞ்சுளாவை தந்தை வெங்கடேஷவர்லு கொடூரமாக கொலை செய்துள்ளார். இவரை தற்போது கைது செய்துள்ளோம்" என்றார்.




மேலும் படிக்க 


Modi South Africa Tour: விமானத்தில் இருந்து இறங்க மறுத்த மோடி? இந்தியாவில் இருந்து சைபர் அட்டாக்..! தென்னாப்ரிக்கா விளக்கம்


Morning Breakfast Scheme: மாணவர்களுடன் சேர்ந்து கிச்சடி சாப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் - அரசுப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்