பீகார் மாநிலம் கயாவில், காயமடைந்த நாயை மோட்டார் சைக்கிளில் பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற வாலிபர் ஒருவரை பார்த்தவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர், இது குறித்த அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 


விடியோ பகிர்வு


இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தை மற்றொரு உள்ளூர்வாசி படம் பிடித்தார், அவர் அந்த வாலிபரை நிறுத்தியது மட்டுமல்லாமல், அந்த நபர் செய்த கொடுமையை எதிர்த்து கேள்வியும் கேட்டுள்ளார். கயா கல்லூரியின் அதிகாரப்பூர்வமற்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அதிர்ச்சிகரமான வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த பதிவில், இந்தியில் தலைப்பிடப்பட்டுள்ளது. அதில், "மனிதநேயத்தின் வெட்கக்கேடான செயல்!!! இந்தப் பணி கயாவுக்கு மட்டுமே சொந்தமானது. இந்த நபர் குறித்து கமெண்ட் பாக்சில் சில நல்ல வார்த்தைகளைச் சொல்லுங்கள்", என தலைப்பு எழுதப்பட்டு இருந்தது.



விடியோவில்


அந்த வீடியோவில், நடுத்தர வயதுடைய ஒருவர் நாயை சங்கிலியில் கட்டி வைத்திருப்பதையும், மறுமுனை அவரது பைக்கில் கட்டப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. விடியோ க்ளிப்பை மேலும் பார்க்கையில், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு வழிப்போக்கரால் நிறுத்தப்படுகிறார். ஏன் இப்படி மனிதாபிமானமற்ற செயலைச் செய்கிறீர்கள் என்று குற்றவாளியிடம் கேட்கிறார்கள். 


தொடர்புடைய செய்திகள்: பவர்பேங்கில் சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசிய இளம்பெண்; மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - சென்னையில் சோகம்


அலட்சியமாக பதில்


அதற்கு அவர், 'நாயுடன் உல்லாசமாக வெளியே வந்தேன்', என்று பதிலளித்தார். மற்றவர் மீண்டும் அவரிடம் கேட்கிறார், நாயை நடத்தும் விதம் இதுதானா? என்கிறார். இந்த கிளிப் இணையத்தில் பகிரப்பட்டதிலிருந்து, சிறிது நேரத்தில் அதிக பார்வைகளையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. பல பயனர்கள் கமெண்ட் செக்ஷனில் திட்டி தீர்த்தனர். குற்றவாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பலர் கமெண்டுகளில் கோரிக்கை வைத்தனர்.






கமெண்டுகளில் பொங்கி எழுந்த மக்கள்


குற்றஞ்சாட்டப்பட்டவர் வாயில்லா ஜீவனை இப்படி செய்வதன் மூலம் தனது மனிதாபிமானமற்ற தன்மையை எவ்வாறு காட்டினார் என்று இந்தியில் ஒருவர் எழுதினார். மற்றொரு பயனர் பீகார் காவல்துறை அதிகாரியை கருத்துப் பிரிவில் டேக் செய்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மற்றொரு யூசர் கொடூரமான செயலுக்காக அவருக்கு மரண தண்டனை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். இதற்கிடையில், இதுபோன்ற சம்பவம் இணையத்தில் வைரலாவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, இதேபோன்ற ஒரு வீடியோ தலைப்புச் செய்தியில் வந்தது, அதில் ஒரு நபர் ஒரு நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் செல்வதைக் காண்பித்தது. சமீபத்தில் கூட ஒரு நபரை, தனது வண்டியை இடித்ததற்காக வண்டியில் பின்னால் கட்டி இழுத்து சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.