பூனே நகர் திலக் சாலையில் தேர்வு எழுத சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரைப் பார்த்து தகாத முறையில் செய்கை காட்டிய இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


ஜனவரி 10-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அதில், தேர்வு எழுத சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறைத்து தகாத முறையில் செய்கை செய்திருக்கிறார் மர்ம நபர் ஒருவர். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண், செய்வது அறியாது திகைத்து நின்றதாக புகாரில் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, சாலையிலேயே அவருக்கு பாலியல் தொல்லை தந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். 


இதனால், அந்த பெண் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து பல நாட்களாக, அந்த சம்பவத்தை நினைத்து பயந்திருந்த அவர் ஏப்ரல் மாதம் புகார் அளித்திருக்கிறார். இதனால், புகார் ஏற்கப்பட்டு அந்த பெண்ணுக்கு தொல்லை தந்த நபரை பூனே காவல்துறையினர் தேடி வருகின்றனர்.



பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகின்றன. இந்நிலையில் பாலியல் வன்கொடுமையை கணவன் செய்தாலும் அது குற்றம்தான் என ஒரு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம்- சமீபத்தில் உத்தரவிட்டு அசத்தி இருக்கிறது. 


தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி கணவன்மீது மனைவி புகார் அளித்திருக்கிறார். அதனை அடுத்து, இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “திருமணம் என்பது ஆண்களுக்கு எந்த மிருகத்தனத்தையும் செய்வதற்கான சிறப்பு உரிமையை வழங்கிடவில்லை. பாலியல் வன்கொடுமை செய்தது கணவனாகவே இருந்தாலும் அது வன்கொடுமைதான்” என தெரிவித்துள்ளனர்.


மேலும், கணவன்மீது புகார் அளிக்கப்பட்டதை பாலியல் வன்கொடுமைதான் என உறுதி செய்து ’பாலியல் வன்கொடுமை’ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து உத்தரவிட்டனர் கர்நாடக நீதிபதிகள். இந்த உத்தரவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து பதிவாகி வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு இது போன்ற தீர்ப்பு வழங்க வேண்டும் என கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.




பிற முக்கியச் செய்திகள்:






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண