ஓசூர் பகுதியல் 13வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட சேர்ந்த கேபிள் ஆப்ரேட்டர் போக்சோ சட்டத்தில் காவல்துறையிரினால் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் சான் பாஷா வயது (42) , கேபிள் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.சான் பாஷா ஒரு தெருவில் உள்ள ஒரு வீட்டில் கேபிள் வயர் சரியில்லை என்றும், அதனால் வீட்டில் தொலைக்காட்சி ஓடவில்லை எனக் கூறி அந்த வீட்டின் உரிமையாளர் கேபிள் டிவி ஆப்ரேட்டரான சான் பாஷாவிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.


 




 


பின்னர் இதனைக்கேட்ட சான் பாஷா கேபிள் ஒயர் சரிசெய்வதற்காக அந்த தெருவில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு சென்ற சான் பாஷா வீட்டில் இருந்தவர்களை அழைத்துள்ளார், ஆனால் வீட்டில் யாரும் இல்லை என்று 13 வயது சிறுமி அவரிடம் தெரிவித்துள்ளார். நீங்கள் கேபிள் சிரிசெய்ய வருவீர்கள் என்று என்னுடைய பெற்றோர் தெரிவித்து சென்றனர் எனத் தெரிவித்துள்ளார் சிறுமி. பின்னர் வீட்டினுள் சென்ற சான் பாஷா பெற்றோர் வெளியே சென்றாலும் 13 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக உள்ளதையும் அறிந்த சான் பாஷா,சிறுமியை அழைத்து ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது கேபிள் டிவி ஆப்ரேட்டரான சான் பாஷா சிறுமிக்கு பாலியல் ரீதியான சீண்டல்கள் செய்துள்ளார். அப்போது சிறுமி வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓடிவந்துள்ளார். 


 




 


பின்னர் இது குறித்து சிறுமி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த பிறகு நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் கேபிள் ஆப்ரேட்டர் சான் பாஷாவை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி சான் பாஷாவின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சான் பாஷாவை கைது செய்து, ஓசூர் சிறையில் அடைத்தனர். கேபிள் டிவி ஆப்ரேட்டர் கேபிளை சரிசெய்ய வீட்டிற்கு சென்ற இடத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுபோன்று சூழ்நிலையில் உள்ள குழந்தைகளை கண்டால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 1098 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.