கடலூர் அடுத்த பெரியகுப்பம் என்ற பகுதியில் நாகார்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்  தொழிற்சாலை இயங்கி வந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு  தானே புயல் தாக்கத்தின் காரணமாக இந்த தொழிற்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது மூடப்பட்ட இந்த தொழிற்சாலை தற்போது வரை கிடப்பில் கிடக்கின்றன 


1,200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த நிலையில் அதில் இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு பொருட்களை கிராம மக்கள் தற்போது ஒன்று சேர்ந்து திருடிச் செல்லும் நிலை தொடர்கதையாக உள்ளது.


ஏராளமான மக்கள் இரு சக்கர வாகனங்களில் உள்ளே புகுந்து இரும்புகளையும் இரும்பு கம்பிகளை எடுத்து செல்கின்றனர். வீடுகளில் உள்ளே புகுந்து போலீசார் உதவியுடன் தொழிற்சாலை நிர்வாகத்தினர் இரும்பு பொருட்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைப்பற்றினர்.


இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த தொழிற்சாலையில் கொள்ளையர்கள் இருப்பதாக புதுச்சத்திரம் காவல்துறையினருக்கு காவலாளி தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி சென்றனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் ஆறு பெட்ரோல் குண்டுகளை அங்கு வந்த போலீசார் மீதும், காவலாளி மீதும் வீசி உள்ளனர்.


6 பெட்ரோல் குண்டுகளில் 3 பெட்ரோல் குண்டுகள் வெடித்த நிலையில் போலீசார் இருந்த இடத்திற்கு சற்றுத் தொலைவில் குண்டுகள் விழுந்து வெடித்ததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் வெடிக்காத பெட்ரோல் குண்டுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரியகுப்பம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண