காஞ்சிபுரம் மாவட்டம் எம்.வி.எம். பி, நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் மகன் பாபு. இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார் வருகிறார். இவருக்கும் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருக்கும், ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது என்பதால் அடிக்கடி திருமண ஜோடிகள் வெளியே சென்று மகிழ்ச்சியாக இருந்து வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.



 

இந்நிலையில், தொடர்ந்து விடுமுறை வந்த காரணத்தினால், குடும்பத்தினர் உறவினர்கள் என 10 பேர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு  சுற்றுலா வந்தனர். கடற்கரை கோவில் பகுதியில் கடலில் குளித்தபோது, பாபுவை ராட்ச அலை இழுத்துச் சென்று, நீரில் மூழ்கி காணாமல் போன பாபுவை மீனவர்கள் உதவியுடன் தேடிவந்த நிலையில், பாறை கற்கள் குவியல் பகுதியில், அவரது உடல் கரை ஒதுங்கியது. உடலை கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார்  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



 

 சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இது போன்ற விடுமுறை நாட்களில், அவ்வப்பொழுது உயிரிழப்பு சம்பவம் நடைபெறுவது தொடர்ச்சியாக உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். குறிப்பாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை உள்ள கடற்கரைப் பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் அலையில் குளித்து வருவதால், இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இது தடுக்க காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். காவல் துறையினர் தங்களது ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்பதே, முதன்மையான கோரிக்கையாக இருந்து வருகிறது