சென்னை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்துள்ளனர்.

Continues below advertisement

அதிகாலை தொடங்கிய சோதனை 

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாகக் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னையில் புரசைவாக்கம் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடம் உள்பட மொத்தம் 5 இடங்களிலும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை சோதனையில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

என்ஐஏ 

தீவிரவாதம், பயங்கரவாதம் உள்ளிட்டவைகளுக்கு ஆள் சேர்ப்பு, நிதி திரட்டுதல் உள்ளிட்ட குற்றங்களை தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்ஐஏ தடுப்பதும், அச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதும் அதன் பணியாகும். இந்த நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து சோதனை நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில்15 குழுக்கள் சோதனை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளில் அதிகாலை 3 மணி அளவில் இருந்து கேரளாவில், ஆந்திரா, சென்னை இருந்து வந்துள்ள என்ஐஏ (தேசிய புலனாய்வு அமைப்பு) அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். சீர்காழி காவல்துறையினர் துணையுடன் 15 குழுக்களாக அதிகாரிகள் வருகை புரிந்து 15 வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் ஒருசில வீடுகளில் செல்போன்கள், லேப்டாப், பென்டிரைவ் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் சோதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்தனர்.

திருமுல்லைவாசல் - அல் பாஷித்

சென்னையில் கைது செய்யப்பட்ட அல் பாஷித்தின் நண்பர்கள், உறவினர்கள் என 15 வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் கைது செய்யப்பட்ட அல்பாஷிதை 2022 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமுல்லைவாசலில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆறு மணி நேர விசாரணை மேற்கொண்டு, அவரது வீட்டில் இருந்து இரண்டு செல்போன்கள், சிம்கார்டுகள், சிடிகள், பென்டிரைவுகள் மற்றும் இவரது அறக்கட்டளை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். தொடர்ந்து அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்குத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி சென்னையில் விசாரணை நடைபெற்று வந்தது.  

இந்நிலையில் அல்பாஷித் திருமுல்லைவாசலை விட்டு சென்னையில் குடியேறிய புரசைவாக்கத்தில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம் ஒன்றியம் டிரைவராக பணிபுரிந்து கொண்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி அவரை என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர். அதனை அடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவரது நண்பர்களான திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த அமீர், நஃபீன், பாசித், பைசல், இம்ரான், பைசர் அலி, மஹதீர் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 15 வீடுகளில் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

இக்காமா பாஷா என்கிற சாதிக்

மயிலாடுதுறை மாவட்டம் நீடூரை சேர்ந்த முகமது ஹனிபா என்பவரின் மகன் இக்காமா பாஷா என்கிற 40 வயதான சாதிக் பாஷா. இவர் சென்னையில் இக்காமா என்னும் தற்காப்பு கலை பயிற்சி மையம் நடத்தி வருவதால் அதே பெயரில் பிரபலமானார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களின் ஒரு இக்காமா பாஷா என்கிற சாதிக் பாஷாவுடன் அல்பாஷித் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.