மகாராஷ்டிரா மாநிலம் சோலப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய். இவர் அதே பகுதியில் தையல் வேலை பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி கீர்த்தி. இந்த தம்பதிக்கு 14 வயதில் விஷால் என்ற மகன் உள்ளார்.  இந்த நிலையில், 14 வயது சிறுவன் விஷால் படிக்காமல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான படத்தை பார்த்து வந்துள்ளார்.


மகனை கொன்ற தந்தை:


இதனை அறிந்த அவரது தந்தை விஜய்,  மகனிடம் பலமுறை இந்த படங்களை எல்லாம் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது. இருப்பினும், அந்த  சிறுவன் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான படத்தை பார்த்து வந்துள்ளார். 


இதற்கிடையில், ஜனவரி 13ஆம் தேதி தனது மகன் காணவில்லை என்று விஜய் மற்றும் அவரது மனைவி கீர்த்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, இவர்களது  வீட்டிற்கு அருகில் இருக்கும் கால்வாயில் சிறுவன் விஷாலின் உடலை போலீசார் மீட்டனர். 


இதனை அடுத்து, சிறுவனின் உடலை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், சிறுவனின்  உடலில் சோடியம் நைட்ரேட் என்ற விஷம் இருப்பது தெரியவந்தது. இதனால், சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.  இதன்படியே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


கால்வாயில் வீசிய கொடூரம்:


அப்போது, கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை விஜய்யிடம் போலீசார் விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணமாக பதிலளித்துள்ளார்.  இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தவே தனது மகனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார் விஜய்.  அவர் வாக்குமூலத்தின்படி, தனது மகன் விஷால் படிக்காமல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான படத்தை பார்த்து வந்துள்ளார்.


அதிலேயே அடியாகி உள்ளார். இதுகுறித்து பலமுறை கண்டித்திருக்கிறேன். ஆனால், தனது மகன் கேட்கவில்லை. இதனால், ஜனவரி 13ஆம் தேதி அன்று காலை தனது மகனை, பைக்கில் அழைத்து சென்று குளிர்பானத்தில் விஷம் கலந்து அவருக்கு கொடுத்தேன்.


இதனால், சுயநினைவை இழந்த தனது மகனை கால்வாயில் வீசி உள்ளேன் என்று தெரிவித்தார். இதனை அடுத்து, போலீசார் குற்றவாளியான விஜய்யை கைது செய்து, ஜனவரி 29ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவருக்கு 14 நாட்ககள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான படத்தை பார்த்ததால், ஆத்திரத்தில் 14 வயது சிறுவனை, அவரது தந்தையே கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க


Crime: முன்பகை! ஆள் மாற்றி திருநங்கையை கொலை செய்த இளைஞர் - நடந்தது என்ன?


Crime: மகளுக்கு பாலியல் வன்கொடுமை.. போக்சோவில் கைதான தந்தை.. திருவண்ணாமலையில் பயங்கரம்