மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியைச் சேர்ந்தவர் கிரண் ஹிங்கா(29). இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த தம்பதி வாசை என்ற பகுதியில் வீட்டில் தங்கியுள்ளனர். எனினும் இவருடைய மனைவிக்கும் அந்த பகுதியில் பக்கத்து வீட்டில் இருந்த தினேஷ் ராட்டே(39) என்ற நபருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 


நாளடைவில் அவர்கள் இருவருக்கும் திருமணத்தை மீறிய பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கிரண் ஹிங்காவின் மனைவி அவரை பிரிந்துள்ளார். தினேஷ் ராட்டே உடன் அந்தப் பெண் சேர்ந்து வேறு பகுதியில் வசித்து வந்துள்ளார். தன்னுடைய மனைவியை பிரிந்த கிரண் ஹிங்கா பல முறை சென்று அவரை மீண்டும் தன்னுடன் வந்து வாழுமாறு வேண்டு கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் அதற்கு அப்பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை. 


இதனால் கிரண் ஹிங்கா தன்னுடைய மனைவியை பழி வாங்க திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி வெள்ளிக்கிழமை இரவு தன்னுடைய மனைவி மற்றும் அவருடைய காதலன் தினேஷ் ராட்டே வசித்து வந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வழக்கம் போல் பிரச்னை செய்துள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் வாக்குவாதம் முற்றிய பட்சத்தில் கிரண் ஹிங்கா தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்த தினேஷ் ராட்டேவை கத்தியால் குத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் தினேஷ் ராட்டே அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 




அந்தப் பகுதியில் பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் கிரண் ஹிங்கா அந்த இடத்தை விட்டு தப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். கொலை செய்த கணவர் கிரண் ஹிங்காவை அவர்கள் தேடியுள்ளனர். 


இந்தச் சூழலில் இன்று அதிகாலை அவரை மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னுடைய மனைவியை பழிவாங்க இந்த கொலையை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். மனைவியை பழிவாங்க கணவர் அவருடைய காதலனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த ஹெட்மாஸ்டர்.. பரவிய வீடியோ.. பாய்ந்தது போக்சோ..