தமிழ்நாட்டின் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக கடந்த 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் வேளாண் நடவடிக்கைகளை கவனிக்க ஒரு தனி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர் தலைமை வகித்து வருகிறார். அவருடன் நிதியமைச்சர்,வேளாண்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் இருந்து வருகின்றனர். இவர்கள் தவிர அந்த அமைப்பிற்கு 3 பேரை மாநில அரசு நியமன உறுப்பினர்களாக நியமிக்கலாம். 


 


அந்த வகையில் கடந்த ஆட்சியில் முன்னாள் எம்பி வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் ஓஎஸ்.மணியன் மற்றும் காமராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். வைத்திலிங்கம் தன்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதேபோல் அந்த இரண்டு பேரும் தற்போது அமைச்சர் பதவியில் இல்லை. இதனால் இந்த அமைப்பிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் புதிதாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  தற்போது 3 பேர் புதிய உறுப்பினர்களாக தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


இந்நிலையில் இந்த அமைப்பிற்கு புதிய உறுப்பினர்களாக புதிய உறுப்பினர்களாக திருவாரூர் திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன், தஞ்சை திமுக எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா நியமித்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. 




பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேலாண்மை ஆணையம் 6 மாதத்திற்கு ஒரு முறை கூடி, வேளாண் மண்டல விதிகள் மாவட்டங்களில் முறையாக பின்பற்றப்படுகிறதா ? தொழிற்சாலைகள் ஏதும் நீக்கமோ அல்லது புதிதாக கொண்டுவர வேண்டுமா என்பது குறித்து ஆலோசித்து முதல்வருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்கொள்ள வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்த மேலாண்மை ஆணையம் ஒரு முறை கூட கூடி இது குறித்து விவாதிக்கவில்லை. இந்தச் சூழலில் தற்போது புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்பின்பாவது இந்த அமைப்பு கூடி உரிய வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் படிக்க: தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் உட்பட 17 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்...தமிழ்நாடு அரசு அறிவிப்பு