மத்திய பிரதேசத்தில், சொந்த குழந்தைகளையே பிச்சை எடுக்க வைத்து கொடுமைப்படுத்தியமைக்காக இந்திரா பாய் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த இந்திரா பாய் என்ற பெண்ணுக்கு 10 , 8, 7, 3 மற்றும் 2 வயதில் உள்ள 5 குழந்தைகள் உள்ளனர். இவர், தனது குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழில்  ஈடுபடுத்தியுள்ளார். இதையடுத்து, குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தியமைக்காக கைது செய்யப்பட்டார்.




விசாரணையில் அவரிடம் 2 மாடி வீடு , ஒரு நிலம் மற்றும் 2.5 லட்சம் ரூபாய் இருப்பது தெரிய வந்தது. மேலும் இந்திரா பாய் தெரிவித்ததாவது, பட்டினியில் வாடுவதற்கு பதிலாக பிச்சை எடுக்கிறோம், நாங்கள் திருடவில்லை என தெரிவித்தார். 


இந்திரா பாய் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது கணவர் மற்றும் 2 குழந்தைகள் தப்பிவிட்டனர்.  இந்த குடும்பத்தினர் கடந்த 45 நாட்களில் 2.5 லட்சம் ரூபாய் சம்பாதித்தாகவும் கூறப்படுகிறது.


இதையடுத்து, அவரது குழந்தைகளில் ஒருவரை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


இது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் முனிசிபல் கார்ப்பரேசனுடன் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்ததாவது....இந்தூரில் உள்ள 38 பெரிய பகுதிகளில் இருந்து சுமார் 7,000 பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும், ஆண்டுக்கு இவர்கள் 20 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.


குழந்தைகளை, இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுத்துவது சரியான முறை கிடையாது. உலகிற்கு புதிதாக வந்த குழந்தைகளை, அவர்களுக்கு அடிப்படை தேவைகளான நல்லொழுக்கம், கல்வி உள்ளிட்டவைகளை கிடைக்க பெறச்செய்வதே அறமாகும் மற்றும் பெற்றோர்களின் கடமையுமாகும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது


Also Read: Train Violence : மின்சார ரயிலில் மோசமாக தாக்கிக்கொண்ட மாணவர்கள்! சென்னையில் பயங்கரம்!