ஷாருக் கான் நடித்துள்ள டங்கி படம் உட்பட இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.


டங்கி


ஷாருக் கான் நடித்து ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் டங்கி. டாப்ஸி, விக்கி கெளஷல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். டங்கி படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இன்று பிப்ரவரி 15 ஆம் தேதி  வெளியாகியுள்ளது.






லண்டன் செல்ல வேண்டும் என்கிற கனவில் பஞ்சாப்பில் இருந்து செல்லும் ஐந்து மனிதர்களை மையமாகக் கொண்டது டங்கி படத்தின் கதை


திஸ் இஸ் மி (This Is Me)


அமெரிக்க நடிகை மற்றும் பாடகரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் மியூசிக்கல் திரைப்படம் திஸ் இஸ் மி. நாளை பிப்ரவரி 16 ஆம் தேதி அமேசான் பிரைமில் இப்படம் வெளியாகிறது.




சலார் (இந்தி)



பிரஷாந்த் நீல இயக்கத்தில் பிரபாஸ் , ப்ரித்விராஜ் நடித்து கடந்த ஆண்டு வெளியானப் படம் சலார். தற்போது இப்படத்தில் இந்தி டப்பிங் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாகிறது


தி கேரளா ஸ்டோரி


 






கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய கேரளா ஸ்டோரி படத்திற்கு தற்போது ஓடிடி ரிலீஸ் கிடைத்துள்ளது. சுதிப்தோ சென் இப்படத்தை இயக்கியுள்ளார், அதா ஷர்மா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 16-ஆம் தேதி ஜீ ஃபைவில் இப்படம் வெளியாகிறது. 


ஐன்ஸ்டைன் அண்ட் தி பாம்ப் (Einstein and the Bomb)


புகழ்பெற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டைன் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி சென்றபோது தான் எதிர்கொண்ட நிகழ்வுகளை குறித்து அவர் பேசிய காணொளிகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ஆவணப்படம் ஐன்ஸ்டைன் அண்ட் தி பாம்ப். சைன்ஸ் மேல் ஆர்வம் கொண்டவர்கள் பார்க்க வேண்டிய ஒரு படம்.