மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு காவலர்கள் அனைவரும் பாதுகாப்பு பணிக்காக வெளியில் சென்று உள்ளனர். அப்போது காவல் நிலையத்திற்குள் எழுத்தர் பணியில் இருந்த ஒரு பெண் காவலரும், முதுநிலை காவலரும் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். அப்போது காவலர் நிலையத்திற்கு வந்த வெளி நபரிடம் மேல்மாடியில் ஆவணங்களை தேடவேண்டும். கீழே காவல் நிலையத்தை கவனித்துக் கொள்ளுங்கள் என பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். அந்த நபரை கீழே காவலுக்கு அமர வைத்துவிட்டு மாடிக்குச் சென்ற இருவரும் அறையைப் பூட்டிக்கொண்டு தனிமையில் இருந்துள்ளனர் .


ஆற்காடு வீராசாமி நலம்! ஒருமையில் விளாசிய கலாநிதி வீராசாமி - வருத்தம் தெரிவித்த அண்ணாமலை!




அப்போது வெளியில் சென்ற ஒரு காவலர் எதிர்பாராத நிலையில் காவல் நிலையத்திற்கு திரும்பியுள்ளார். வெளி நபர் மட்டும் இருப்பதை பார்த்த அவர் ”எங்கே யாரையும் காணோம் என கேள்வி எழுப்பியுள்ளார்” அந்த நபரோ மேலே ஏதோ ஆவணத்தை தேட வேண்டும் எனக் கூறி தன்னை பார்த்துக்க சொல்லி சென்றவர்கள் வரவில்லை என்றபடி அந்த நபரும் கிளம்பிச் சென்றுள்ளார். அந்த காவலர் தனது சீருடையை மாற்றுவதற்காக மாடிக்குச் சென்று உள்ளார்.


Nayanthara Tirupati Visit: 'வீட்டுக்கே போகாமல் திருப்பதி வந்தோம்' செருப்பு அணிந்த சர்ச்சைக்கு மன்னிப்புக் கோரிய விக்னேஷ் சிவன்!




அங்கு உள்ள அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவை திறக்க வில்லை. இதில் சந்தேகம் அடைந்த காவலர் பின்புற ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது அங்கு இருவரும் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இருவரையும் வெளியே அழைத்து அந்த காவலர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இந்த தகவல்  சக காவலர்களுக்கும் தெரியவந்தது. கையும் களவுமாக சிக்கிய இருவரும் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு விடுமுறை சென்றுவிட்டனர் . இதுகுறித்து புகார் உயர்நிலை அதிகாரிகளுக்கு சென்றது இதன்பேரில் விசாரணைக்காக அவர்கள் இருவரையும் உயர் அதிகாரிகளால் அழைக்கப்பட்டுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண