மதுரை ரயில் நிலையத்தில் 75,600,00 ரூபாய் ரொக்கம், 450 கிராம தங்கம், 26.7 கிராம் வெள்ளி பறிமுதல் செய்து இருவரிடம் விசாரணை.
 
72 லட்சம்  500 ரூபாய் நோட்டுகள்
 
மதுரை ரயில் நிலையம் நடைமேடை 1 பார்சல் அலுவலகம் அருகே சந்தேகம் அளிக்கும் வகையில்  நின்று கொண்டிருந்த இரு இளைஞர்களை மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினர், அலுவலகத்திற்கு அழைத்து சென்றது விசாரணை மேற்கொண்டனர். அப்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த தன்மய் ஹரிதாஸ் சலுங்கே, வயது 21 என்பதும் தற்போது கோவில்பட்டி தெற்கு பஜாரில் வசித்து வருவதாகவும் தெரியவந்து. அவர் கொண்டு வந்த நீல நிற பையை வருமான வரித்துறையினர் முன்னிலையில் சோதனை செய்ததில் 72 லட்சம்  500 ரூபாய் நோட்டுகளாக இருந்தது தெரியவந்தது. 
 
3 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் மற்றும் 450.59 கிராம் தங்க
 
தொடர்ந்து மற்றொரு இளைஞர் கோவில்பட்டியை சேர்ந்த சந்தனராஜ் 29 என்பதும் அவர் கொண்டு வந்த கருப்பு நிற பையை சோதனை செய்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கமும், ரூ.4122898 மதிப்புள்ள 450.59 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.3073- மதிப்புள்ள 26.730 கிராம் வெள்ளி நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் மொபைல் போன் உள்ளிட்ட பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை ரயில் நிலையத்தில் இரண்டு இளைஞர்களிடம் மெத்தம் ரூ.116,859,71- மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்து வருமானவரித் துறையிடம் ஒப்படைத்தனர்.