சென்னை:சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த ஜூலை 31ஆம் தேதி தொடங்கிய 'பயணிகள் வாகனக் கண்காட்சி 2.0' (Passenger Vehicle Expo 2.0) இன்றுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த கண்காட்சியின் மூன்றாவது நாளான நேற்று, பொதுமக்கள் மற்றும் வாகனத் துறை சார்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.
கண்காட்சியில் எஸ்.ஆர்.எம். பி.ஆர். ஆட்டோடெக், அசோக் லேலாண்டு, மஹீந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்களை காட்சிக்கு வைத்திருந்தன. பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இந்த வாகனங்கள், பார்வையாளர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றன.
SRM நிறுவனம் புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தியது
எஸ்.ஆர்.எம். பி.ஆர். நிறுவனம் இந்தக் கண்காட்சியில் தங்களது மூன்று முக்கிய வகை வாகனங்களை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. பொதுப் பயணிகளுக்கான பேருந்து, நிறுவன ஊழியர்களுக்கான ஸ்டாஃப் பேருந்து மற்றும் குடும்ப பயணத்துக்கேற்ப வடிவமைக்கப்பட்ட ‘கேரவன்’ வாகனம் என மூன்றும் தனித்துவமான வடிவமைப்புகளோடு வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த வாகனங்களில் தரமான இண்டீரியர் வசதிகள், பயணிகளுக்கான நவீன சௌகரியங்கள் மற்றும் அழகிய உள்ளமைப்புகள் என்பவை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
நிகழ்ச்சியில் டாக்டர் ரவி பச்சமுத்து பங்கேற்பு
எஸ்.ஆர்.எம். பி.ஆர். குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து, கண்காட்சியில் நேரில் கலந்து கொண்டு, பல நிறுவனங்களின் வாகனங்களை பார்வையிட்டு, அவற்றின் தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி ஆராய்ந்தார். வாகனத் துறையில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய முயற்சிகளை அவர் பாராட்டினார்.
பின்னர், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற அவர், நிறுவன பிரதிநிதிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
கண்காட்சிக்கு பெரும் வரவேற்பு
மூன்று நாட்களாக நடைபெற்ற இந்தக் கண்காட்சி, வாகனத் துறையில் புதிய வளர்ச்சிகளை நேரடியாக அறியும் ஒரு சிறப்பான வாய்ப்பாக அமைந்தது. தொழில்நுட்ப ஆர்வலர்கள், வாகன நிபுணர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரிடமும் இருந்து இந்த கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
Car loan Information:
Calculate Car Loan EMI