மதுரை சிறையில் விசாரணை கைதிக்கு பிளேடு கொடுத்து தற்கொலை முயற்சிக்கு தூண்டியதாக காவலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் 29 வயதான முகமது உசேன். இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை, சமயநல்லுார் மீனாட்சி நகரில் பரவை காய்கறி மார்க்கெட் வியாபாரி சாமுவேல் வீட்டில் புகுந்து, பெண் களை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில் முகமது உசேன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர் விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கைதாகி, மதுரை சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன் சக கைதிகளுடன் ஏற்பட்ட மோதலால், வேறு பிளாக்கிற்கு மாற்றப்பட்டார்.


அந்த பிளாக்கில் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக முகமது உசேன், டியூப் லைட்டை உடைத்து உடல் முழுவதும் கீறி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் தனி ‘செல்’லில் அடைக்கப்பட்டார்.




இந்நிலையில், மே 29ல் பிளேடால் உடலில் கீறி மீண்டும் தற்கொலைக்கு முயன்றார். இதற்காக, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சின்னச்சாமி என்பவரிடம் அவர், பிளேடு வாங்கியது தெரிந்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை கிளை சிறை காவலரான சின்னச்சாமி, மாற்றுப்பணியாக மதுரை சிறையில் பணிபுரிகிறார்.


மேலும் படிக்க : HBD Manirathnam : ஒலிக்கும், ஒளிக்கும் உயிர் கொடுத்த நாயகன்.. தனிக்காவியங்களின் செல்வன்.. HBD இயக்குநர் மணிரத்னம்!


முகமது உசேனின் தனி 'செல்' பாதுகாப்பு காவலர் சரவணசெல்வம் சாப்பிட சென்ற போது, அவருக்கு பதிலாக  பணியில் இருந்த சின்னச்சாமி பிளேடு கொடுத்து, 'நான் சென்றபிறகு அறுத்துக்கொள்' எனக் கூறியுள்ளார். தொடர்ந்து சின்னச்சாமி அங்கிருந்து கிளம்பிவிட சாப்பிட்டுவிட்டு வந்த சரவணசெல்வம் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். 


இதையடுத்து, தற்கொலைக்கு முயன்ற விசாரணை கைதி முகமது உசேன், கைகளில் எப்படி பிளேடு வந்தது என்று விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கண்ட அனைத்து விவரங்களும் தெரியவர, சின்னச்சாமியை சஸ்பெண்ட் செய்து, சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் உத்தரவிட்டார்.


இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண