கிரானைட் குவாரி ஏல அறிவிப்புக்கு எதிராக போராடிவரும் இயற்கை ஆர்வலர் மீது 110 IPCன் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்மன்.
இயற்கை ஆர்வலரான கம்பூர் செல்வராஜ் என்ற இளைஞர் தொடர்ச்சியாக மனு அளிப்பது போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் அவருக்கு பழைய வழக்குகளை காரணம்காட்டி 110 IPC பிரிவின் கீழ் பொது அமைதிக்கு குந்தகம் என கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி, திருச்சுனை, அய்யாபட்டி கிராமங்களில் கிரானைட் குவாரி கற்களை எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து மனு அளித்தனர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக கிரானைட் குவாரி ஏல அறிவிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்து நவம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என தள்ளிவைக்கப்பட்டது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பத்திரப்பதிவு அலுவலகத்தில் 50 வயது ஆண் தீக்குளித்து தற்கொலை - மதுரையில் பெரும் பரபரப்பு
இந்நிலையில் கிரானைட் குவாரி ஏலத்திற்கு மேலூர் கம்பூர் கிராமத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலரான கம்பூர் செல்வராஜ் என்ற இளைஞர் தொடர்ச்சியாக மனு அளிப்பது போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் அவருக்கு பழைய வழக்குகளை காரணம்காட்டி 110 IPC பிரிவின் கீழ் பொது அமைதிக்கு குந்தகம் என கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
கிரானைட் ஏலத்திற்கு எதிராக போராடிவருபவர்களை 110 IPC பிரிவை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கும் வகையில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறதா? என சந்தேகம் எழுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.