கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட சன்னி லியோன் தற்போது இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான  ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்த அவர், தற்போது முழு நேர கதாநாயகியாக VAU மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோ தயாரிப்பில் ஆர்.யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ள,  ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் அறிமுகமாகியுள்ளார். 


 






                                                     


ஜாவித் ரியாஸ் இசை அமைத்துள்ள இந்த படத்தில், நடிகர்கள்  சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள  ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு  விழா நேற்று மாலை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.


 






சன்னிலியோன் பேசுவதற்காக மேடையேறினார். அப்போது ஜிபி முத்துவும் மேடையேற்றப்பட்டார்.  சன்னிலியோனிடம் பேசிய ஜிபி முத்து,  “  உங்களை பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களது போட்டோவை பார்த்து, நான் உங்களுக்கு ஒரு ஸ்வீட் கொடுத்தேன். அதுதான் பால்கோவா. தமிழ்நாட்டில் பால்கோவா ரொம்ப பெரிய விஷயம். அதை நான் உங்களுக்குதான் கொடுத்தேன். நீங்க பால்கோவா மாதிரி அழகா இருக்கீங்க என்று சொன்னார். அப்போது அரங்கில் இருந்தவர்கள் ஆர்ப்பரிக்க, சுதாரித்துக்கொண்ட ஜிபி முத்து, மக்களே பார்த்து நீங்கள் நினைப்பதை நான் சொல்கிறேன் என்றார். தொடர்ந்து சன்னிலியோனுக்கு ஜிபி முத்து பால்கோவா ஊட்டிவிட, சன்னிலியோனும் ஜிபி முத்துவுக்கு பால்கோவாவை ஊட்டி விட்டார்.