மத்தியப்பிரதேச மாநிலத்தில் திருமண தினத்தன்று மணமகன் மற்றும் மணமகள் இருவரும் விஷம் குடித்த நிலையில் மணமகன் உயிரிழந்து விட்டார். மணமகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 21 வயது ஆணுக்கும், 20 வயது பெண்ணுக்கும் கடந்த செவ்வாய் கிழமை அன்று ஆர்ய சமாஜ் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் திருமணம் நடைபெறவிருந்த நாளன்று  மணமகன் விஷம் குடித்துள்ளார். இதனை அறிந்த  மணமகளும் விஷம் குடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் மணமகன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மணமகள் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்


இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருமணம் நடப்பதற்கு முன்பாக கடந்த பல நாட்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணமகள் மணமகனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தன்னுடைய தொழில் காரணமாக திருமணம் இப்போது வேண்டாம் என கூறிய மணமகன் இரண்டு ஆண்டுகள் அவகாசம் கேட்டுள்ளார்.  இதனால் மணமகன் மீது கோபமான மணமகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இதனால் மணமகன் வேறுவழி இன்றி உடனடியாக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில் விரக்தியில் இருந்த  மணமகன் விஷம் குடித்துள்ளார். இதனை மணமகன், மணமகளிடம் கூறியதை அடுத்து அவரும் விஷம் குடித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. 




Suicidal Trigger Warning.

 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

 

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

 

மேலும் படிக்க