குளித்துவிட்டு, தான் கேட்ட  டவலை கொண்டு வர தாமதம் செய்த மனைவியை கணவர் கொன்ற அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. 


மத்திய பிரதேசம் மாநிலம் பாலகாட் மாவட்டத்தின் கிர்னாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹிராபூர் கிராமத்தில் சனிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.


சம்பவத்தன்று, வனத்துறையின் தினக்கூலி ஊழியரான ராஜ்குமார் பாஹே (50), தனது மனைவி புஷ்பா பாய் (45) என்பவரிடம் குளித்துவிட்டு, டவல் தருமாறு கேட்டடுள்ளார். அப்போது, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த அவரது மனைவி சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார். இதனால் கோபமடைந்த கணவன், தனது மனைவியின் தலையில் மண்வெட்டியால் பலமுறை அடித்துள்ளார். இதில். சம்பவ இடத்திலேயே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். தனது 23 வயது மகளையும் தடுக்க முயன்றபோது அவரையும் அச்சுறுத்தியுள்ளார். 




பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மனைவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர், ராஜ்குமார் பாஹே மீது போலீசாரிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது கொலை மற்றும் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


மேலும் செய்திகள் படிக்க


 






 


 










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண