மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரில் ஒரு விசித்திரமான சம்பவம் ஒரு அரங்கேறியுள்ளது. மணப்பெண்ணுக்கு போட்ட மேக்கப் பெண்ணின் அழகை கெடுத்து விட்டதாக காவல்நிலையத்தில் அப்பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். 


அந்த மேக்கப் பார்லர் மீது அப்பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரில், மணப்பெண்ணுக்கு மோசமாக மேக்கப் போட்டனர். இதுகுறித்து உறவினர்களாகிய நாங்கள் கேள்வி எழுப்பியபோது அந்த ஒப்பனை கலைஞர் அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிவித்திருந்தனர். 


என்ன நடந்தது..? 


கடந்த டிசம்பர் 3ம் தேதி மணமகள் ராதிகா சென் தனது திருமணத்திற்காக அழகு நிலையம் நடத்தும் மோனிகா பதக் என்ற நபரை அணுகி உள்ளார். திருமணமான அன்று, குடும்பத்தினர் பியூட்டிசியனுக்கு போன் செய்து உள்ளனர். அப்போது அவர் போனை எடுக்கவில்லை, மேலும், மோனிகா பதக் வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். 


இதன் காரணமாக, மணப்பெண்ணிற்கு தனது பார்லரில் பணிபுரியும் பெண்ணை மேக்கப் போட சொல்லியுள்ளார். அங்கு பணிபுரியும் புதிய ஊழியர் மணமகளுக்கு மேக்கப் போட்டு அவரது அழகை பியூட்டி செய்கிறேன் என்ற பெயரில் முழுவதுமாக கெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 


இதுகுறித்து அப்பெண்ணின் உறவினர்கள் அழகு நிலையம் வைத்திருக்கும் மோனிகா பதக்கிற்கு போன் செய்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ஒப்பனை செய்யும் கலைஞர் செய்த தவறை ஏற்காமல் மணமகளின் குடும்பத்தினரை மிரட்ட தொடங்கியுள்ளார். மேலும், மணப்பெண்ணின் சென் சமூகத்தினர் மீது சாதிவெறிக் கருத்துகளை கூறியதாகவும் கூறப்படுகிறது. 


இதை தொடர்ந்து, மணப்பெண்ணின் உறவினர்கள் சென் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த புகாரை தீவிரமாக எடுத்துக்கொள்வதாக நிலைய பொறுப்பாளர் அனில் குப்தா தெரிவித்தார். விரைவில் இந்த விவகாரத்தில் மோனிகா பதக்கிடமும் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்படுவார் என உறுதியளித்தார்.