மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் உள்ள கந்த்வா மாநகராட்சியில் 3-ஆம் பிரிவு உதவி எழுத்தராகப் பணிபுரிந்து வந்தவர் 27 வயதான ராஜ்னி மசாரே. இவருக்கு அதே பகுதியில் வசித்து வந்த நபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் முன்னிலையில் திருமணத்திற்கு பேசி முடிக்கப்பட்டது. 


திருமணத்திற்கு முன்னதாக இவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்ய ஒரு குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து வைத்துள்ளனர். இந்தநிலையில், இந்த பெண்ணுக்கும் அதே பகுதியில் வசித்து வந்த ஒரு நபருக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது.




இந்தநிலையில், அந்த பெண்ணுக்கு வேறொரு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்ய இருப்பதை ஏற்க முடியாத அந்த நபர், சரியாக நிச்சயதார்த்ததிற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.அந்த பெண்ணின் வீட்டின் மொட்டை மாடியில் தனியாக அழைத்து அந்த பெண்ணிடம் திருமணம் குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். ஒரே கட்டத்தில் இருவருக்கும் இடையே மிக பெரிய சண்டை ஏற்பட ஆத்திரம் தாங்காத அந்த நபர் கொடூரமான ஆயுதத்தால் சரமாரியாக தாக்கியுள்ளார். நிலை குலைந்த பெண் ஒரு கட்டத்தில் கொடூர தாக்கத்தில் மரணமடைந்துள்ளார். 


அதன்பிறகு, இறந்த அந்த பெண்ணின் உடலை தூக்கி வாட்டர் டாங்கில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். வெகு நேரமாக பெண்ணை காணாத பெற்றோர், வீடு முழுவதும் தேடி கடைசியாக மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். அப்பொழுது, எதிர்பாராத விதமாக வாட்டர் டாங்கில் பார்க்கும்போது அந்த பெண் சடலமாக கிடந்துள்ளார். 


மேலும் படிக்க : Local Body Election | தேனி மாவட்டத்தில் போட்டியின்றி வெற்றி பெற்ற 4 வேட்பாளர்கள்


இதையடுத்து, தவலறிந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற கொலை குற்றவாளியை தேடி வருகின்றனர்.