கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நாகம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். கரூர் பசுபதி பாளையம் பகுதிக்கு உட்பட்ட டிராபிக் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். மதியழகன் கரூர் திருச்சி சாலை சுங்ககேட் அருகே டிராபிக் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, காந்திகிராமம் பகுதியில் இருந்து சுங்கேட் பகுதிக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், சிக்னல் அருகே எல்லைக்கோட்டை தாண்டி நின்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த மதியழகன் எல்லை கோட்டை தாண்டி ஏன் நிறுத்தினாய், குடித்திருக்கிறாயா? என கேட்டதோடு, ஓரமாக வருமாறு கூறியுள்ளார். தன்னால் வர முடியாது என அந்த நபர் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், பைக்கில் இருந்து மதியழகன், சாவியை எடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், டிராபிக் போலீசை, கையால் தட்டி விட்டதோடு, சட்டையை இழுத்து கிழித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக காயமடைந்த மதியழகன், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கிய நபரும்,காயமடைந்ததாக கூறிய கரூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் டிராபிக் போலீஸ் மதியழகனின் புகாரின் பேரில் தாந்தோணி மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட போது டிராபிக் போலீஸ் தாக்கியவர் கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், என்பதும், லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரிய வந்ததோடு, வெங்கடேசனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி மது விற்ற 73 பேர் மீது வழக்கு பதிவு.
கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக 73 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணி கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும் அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு நாள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார்களும் அந்தந்த காவல் நிலைய போலீசார்களும் கூடுதல் விலைக்கு மதுபான விற்பனை குறித்து தீவிர சோதனை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில், மதுவிலக்கு போலீசார்கள் 31 பேர் மீது வழக்கு பதிந்து 329 குவாட்டர் பாட்டில்களையும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் 42 பேர் மீது வழக்குப்பதிந்து 335 குவாட்டர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதன் அடிப்படையில் திருவள்ளுவர் தினத்தன்று ஒரே நாளில் 73 பேர்கள் மீது வழக்கு பதிந்து 672 குவாட்டர் பாட்டில் களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.