உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்துகொண்டே வருகிறது. சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வகை பெண்களுக்கும் அங்காங்கே பாலியல் சீண்டல்கள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 


லண்டன் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் இருநாட்களுக்கு முன்பாக இரவு 7.30 மணியளவில் ஒரு ஆண் தன்னுடைய நாயுடன் நடைபயிற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் மரத்தடியில் பெண் ஒருவரை இரண்டு நபர்கள் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தன்னுடயை நாயை ஏவி விட்டு அவர்கள் இருவரை பிடிக்க கூறியுள்ளார். 


மேலும் படிக்க:வீட்டு அடித்தளத்தில் நிர்வாணமாக இளம்பெண்.. காட்டிக்கொடுத்த மெசேஜ்.. சிக்கிய இளைஞர்!


அங்கு இருந்த இரண்டு நபர்களில் ஒருவரை அந்த நாய் விரட்டி பிடித்துள்ளது. அத்துடன் அவருடைய கை விரலையும் கடித்துள்ளது. அதன் பின்பு நாயின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அத்துடன் காயம் அடைந்த அப்பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 




காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில் 13 வயது நிரம்பிய இரண்டு சிறுவர்களும், 35 வயது மதிக்கத்தக்க பெண்ணை பூங்காவில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு சிறுவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரும் அவர்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அந்த சிறுவனின் நண்பனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த நாயின் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பெண் ஆகியோரிடமும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இரண்டு சிறுவர்கள் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக பூங்கா ஒன்றில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் படிக்க: வங்கதேசத்தில் படகில் பயங்கர தீ விபத்து.. 40 பயணிகள் உயிரிழந்த சோகம்.. என்ன நடந்தது?