சாப்பாட்டிற்கு தினசரி ரசம் வைத்தாக கூறி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் தாயை இழந்த இரு குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்துள்ளது

 

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

 




மதுரை மாநகர்பகுதிக்கு உட்பட்ட கீரைத்துறையை சேர்ந்த கண்ணன் - சிவஞான செல்வி தம்பதியர்.  இவர்களது குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கண்ணன் தினசரி மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். குடித்துவிட்டு வரும் எனக்கு காரசாரமாக தான் குழம்பு வைக்கவேண்டும், என தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.



இந்த சூழலில் கடந்த 2016- ஆம் ஆண்டு மதிய உணவிற்கு தினசரியும் ரசம் வைத்து தருவதாக  கூறி தனது மனைவி சிவஞான செல்வியுடன் தலைக்கு ஏறிய மது போதையில் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கண்ணன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தனது மனைவியின் தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். இது தொடர்பாக கீரைத்துறை காவல்- துறையினர் கணவர் கண்ணன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 



 


 

இந்த வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் மதுரை மாவட்ட 5 வது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.  இதையடுத்து இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த பின்னர் கண்ணன் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதாக கூறி மனைவியை கொலை செய்த கணவன் கண்ணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.  மேலும் தாயை இழந்து தவிக்கும் இரு குழந்தைகளுக்கும் அரசு சார்பில் நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்தும் உத்தரவிட்டார்.