கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உள்ள வனப்பகுதிக்கு அப்பகுதியை சேர்ந்த வேறு நபர்கள் சிலர் அடிக்கடி சென்று வருவதை அறிந்த உள்ளூர் நபர்கள் சிலர் இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவலை கொடுத்துள்ளனர். இதனை அறிந்த காவல் துறையினர் உதவி காவல் கண்காணிப்பாளர் கிருத்திகா தலைமையிலான காவல்துறையினர் அடிக்கடி வனப்பகுதிக்கு செல்லும் நபர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்த தொடங்கினர்.



அதில் அடிக்கடி ராயக்கோட்டை வனப்பகுதிக்குள் சென்று வந்த 5 பேரில் இராயகோட்டை பகுதியை சேர்ந்த பலராமன் (34), கிருஷ்ணகிரியை சேர்ந்த  இராமமூர்த்தி (60), ஓசூரை சேர்ந்த ஜெயராமன் (60), சென்னையை சேர்ந்த சுரேஷ் (38), அரக்கோணம் பகுதியை சேர்ந்த மதுசூதனன் (31) என்பது இவர்கள் விரைவில் செட்டில் ஆக வேண்டும் என வேகத்தில் தமிழில் வெளியாகி சக்கைபோடு போட்ட சதுரங்க வேட்டை திரைப்படத்தை பார்த்து பணக்காரர்களிடம் பணம் பறிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதன்படி  8 கிலோ எடையுள்ள செம்பு பாத்திரத்தில் 80 போலி வைரங்களை போட்டு வனப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தோண்டி புதைத்துள்ளனர். 



பின்னர் இவர்கள் போட்டு வைத்துள்ள திட்டத்தின்படி பணக்கார செல்வந்தர்களை தேடிப்பிடித்து ராயக்கோட்டை வனப்பகுதியில் புதையல் உள்ளதாகவும், அதனை நல்லவிலைக்கு விற்க நம்பிக்கையான ஆட்கள் தேவைப்படுவதாகவும், விற்று கொடுத்தால் விற்பனையாகும் தொகையில் பாதி பங்கை தர தயார் என்றும் கூறியுள்ளனர். இவர்களின் திட்டத்தின்படி பணக்கார செல்வந்தர்கள் இவர்களின் வலையில் சிக்கினால், தங்களுக்கு வனப்பகுதியில் புதையல் ஒன்று கிடைத்திருப்பதாகவும், பணத்தை எடுத்து கொண்டு வந்தால் அதனை காட்டுகிறோம் என்று கூறு அவர்களை வனப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளனர்.



தமிழ்நாட்டில் பேனர்களை தடுக்க விதிகள் வேண்டும் - சென்னை ஐகோர்ட்


அங்கு ஏற்கெனவே இரண்டுபேர் விண்வெளிக்கு செல்வது போன்று தோற்றம் கொண்ட கவச உடையில் காத்திருப்பர். புதையலில் மின்னல் தாக்கி அதீத சக்தி இருப்பதாக கூறி, பள்ளம் தோண்டி புதையலை தூரத்தில் இருந்து காண்பித்த பிறகு, மீண்டும் புதையலை அதே இடத்தில் புதைத்துவிட்டு வந்துள்ளனர். பின்னர் செல்வந்தரை எளிதில் ஏமாற்றி விட்டு அதன்பிறகு அந்தப் பொருள் பல கோடி ரூபாய் விலைபோகும் என கூறி அதை அவர்களுக்கு கொடுப்பதாக உறுதிமொழி அளித்து அதன் பிறகு அவரிடமிருந்து பல லட்சம் ரூபாய் பணத்தை  பறிக்க திட்டம் தீட்டி உள்ளதாக கைதான நபர்கள் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


விவசாயிகள் கொல்லப்படும்போது அகிலேஷும், மாயாவதியும் எங்கு சென்றார்கள்? - பிரியங்கா காந்தி