கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள இருதாலம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் 37 என்பவருக்கும் அதே பகுதியை சார்ந்த சுமதி 34 என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுமதி அருகில் உள்ள ஜக்கேரியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் கடந்த மூன்று வருடங்களாக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் எம். கொத்துரை சேர்ந்த பாலக்குமார் 27 என்பவரும் வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் பாலகுமாருக்கும் சுமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த சம்பவம் ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.
இதை அடுத்து ஸ்ரீதரன் குடும்பத்தினர் சுமதியை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனாலும் சுமதியால், பாலகுமாரை மறக்க முடியவில்லை, அவரிடம் தொடர்பை கைவிடாமல் தொடர்ந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள ஸ்ரீதரின் அண்ணன் சீனிவாசன் வீட்டிற்கு இவர்களது மகள் தங்கிவிட்டார். மேலும், ஸ்ரீதர் மகனும் வழக்கம்போல் அருகில் உள்ள தாத்தா வீட்டிற்கு தூங்குவதற்காக சென்று விட்டார். இதனால் ஸ்ரீதர், சுமதி இருவரும்வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை சீனிவாசன் தனது தம்பி ஸ்ரீதரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு படுக்கையில் ஸ்ரீதர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். அப்போது அருகில் சென்று பார்த்துள்ளார், அவரது ரெண்டு பக்க கண்ணங்களும் சிவந்த நிலையில் இருந்தது. காதின் அருகில் ரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்டது. மேலும் வலது கை விரல்களிலும் சீராய்வு காயங்கள் இருந்தன. இதனை அடுத்து ஸ்ரீதர் உயிரிழந்திருப்பதை கண்டு சீனிவாசன் திடுக்கிட்டார். இது குறித்து கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்ரீதர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ஸ்ரீதர் இறப்பு குறித்து சுமதியிடம் போலீசார் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதை அடுத்து அவரிடம் கிறுக்கு பிடி விசாரணை நடத்தினர்.
இதில் கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டியது தெரிய வந்தது. தொடர்ந்து காவல்துறை விசாரணையில் தனக்கும் பாலகுமாரன் என்பவருக்கும் உடனான பழக்கம் வீட்டிற்கு தெரிய வந்தது. எனது கணவர் பாலகுமாரனிடம் இருக்கும் தொடர்பை கைவிடுமாறு வலியுறுத்தினார். மேலும், பாலகுமாரனிடம் தனது கணவர் கண்டிப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் நமது பழக்கத்திற்கு இடையூறாக இருந்து வருகிறார். அதனால் அவர் இருக்கும் வரை நாம் இருவரும் இதுபோன்ற இருக்க முடியாது என தெரிவித்ததாகவும், கணவரை இருவரும் சேர்ந்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். இதனை அடுத்து வீட்டில் குழந்தைகள் இல்லாத நேரத்தில் பாலகுமாரனை வர வைத்து பின்வாசல் திறந்து வைத்திருந்தேன். அதிகாலையில் வீட்டிற்கு வந்த பாலகுமாரனுடன் சேர்ந்து நன்கு தூங்கிக்கொண்டிருந்த எனது கணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு தலையணையால் முகத்தை பலமாக அழுத்தினோம். இதில் எனது கணவர் துடிதுடித்து உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை உறுதி செய்த பிறகு பாலகுமாரனை அங்கிருந்து அனுப்பி விட்டேன். கணவர் இயற்கையாக இறந்தது போல் ஊரை ஏமாற்றி விடலாம் என திட்டமிட்டோம். ஆனால் காவல்துறையினர் இதனை கண்டுபிடித்தனர் என விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். இதனை அடுத்து சுமதி மற்றும் அவரது கள்ளக்காதலன் பாலகுமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனோடு சேர்ந்து, மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.