தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவர் புதுரோடு அருகே உள்ள தூத்துக்குடி புரோட்டா கடையில் சிக்கன் மஞ்சூரியன் வாங்கிக் கொண்டு வீட்டில் சாப்பிட முயன்ற போது சிக்கனுக்கு பதிலக கருப்பு நிற முடிகளுடன் வினோதாமாக கறியை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை இல்லை என்பதால் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரும், இவரது நண்பர் வெங்கடேஷ் என்பவரும் கடந்த 10ந்தேதி இரவு கோவில்பட்டி புதுரோடு அருகே உள்ள தூத்துக்குடி புரோட்டா கடை என்ற ஹோட்டலில் 8 புரோட்டா மற்றும் சிக்கன் மஞ்சூரியன் பார்சல் வழங்கியுள்ளனர். அதற்காக ரூ250 போன் பே மூலமாக செலுத்தியுள்ளனர். உணவினை வாங்கிய வேல்முருகன் வீட்டிற்கு சென்று தனது குழந்தைகளுக்கு புரோட்டாவை கொடுத்து சாப்பிட சொல்லியுள்ளார். இதையெடுத்து சிக்கன் மஞ்சூரியன் பார்சலை பிரித்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதில் சிக்கனுக்கு பதிலாக இரண்டு இறைச்சி துண்டுகள் முடிகளுடன் கிடந்துள்ளது. கோழிக்கறியாக இல்லமால் வித்தியசமாக கறியாக இருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தைகளை சாப்பிடுவததை நிறுத்த செய்துள்ளார். இதனை தொடர்ந்து மறுநாள் ஹோட்டலில் வந்து கேட் போது சரியான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிக்கன் பதிலாக முடிகளுடன் சுகாதரமில்லமால் தந்த ஹோட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் தனது வழங்கியது எந்த வகை இறைச்சி என்பதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில்பட்டி நகர உணவுபாதுகாப்பு அலுவலர் ஜோதிபாஸ்விடம் வேல்முருகன் மனு அளித்துள்ளனர். மனுவினையும், சிக்கன் பதிலாக தந்த கறி தொடர்பான புகைப்படத்தினை மட்டும் வாங்கி கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட வேல்முருகன் கூறுகையில் சிக்கன் என்று ஆர்வமாக பிரித்து பார்த்த போது சிக்கன் போல் இல்லமால், எந்த வகை கறி என்று தெரியவில்லை, கருப்பு நிற முடிகளுடன் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இது போன்ற சுகாதரமற்ற உணவினை குழந்தைகள் உண்டால் பாதிக்கப்படும் என்பதால் ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்ட போது எவ்வித பதிலும் தரவில்லை என்பதால் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் அலுவலர் புகாரை மட்டும் பெற்று கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றும், உணவு பாதுகாப்பு அலுவலர் ஹோட்டல் நிர்வாகம் கொடுத்த இறைச்சியை ஆய்வு அனுப்பி பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.