இரவில் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிச்சென்ற இளம்பெண்ணுக்கு இரண்டு போலீசார் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் தரவுகளின்படி, கொல்கத்தா இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், அங்கு போலீசாரால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்க மாநிலம்  அசன்சோலில் வசிக்கும் 25 வயதுடைய பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக கொல்கத்தாவுக்குச் சென்றிருந்தார். நள்ளிரவு 12:30 மணியளவில் சால்ட் லேக் அருகே உள்ள கருணாமொயி பேருந்து நிலையத்திற்கு வந்த பெண் பேருந்துக்காக காத்துக்கிடந்தார். இரவு வெகுநேரமாகியும், அந்த பெண்ணின் செல்போனில் சார்ஜ் இல்லாததால், ஆப் மூலம் டாக்ஸியை கூட புக் செய்ய முடியவில்லை. மேலும் படிக்க: அசந்துதூங்கிய முன்னாள் காதலி.. ஸ்மார்ட்ஃபோன் வழியாக 18 லட்சத்தை அபேஸ் செய்த காதலன்.. என்னா ட்ரிக்கு?


வேறு எந்த போக்குவரத்து வசதியும் இல்லாததால், அந்த பெண், போலீஸ் பைக்கில் வந்த மூன்று ஆண்களிடம் லிப்ட் கேட்டதாக கூறப்படுகிறது. அதில், ஒருவர் அவரை இறக்கிவிட ஒப்புக்கொண்டு அந்தப் பெண்ணை தனது பைக்கில் ஏறச் சொன்னார். பைக் சிறிது தூரம் சென்றதும், ஒரு போலீசார் பைக்கை நிறுத்த, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பைக்கில் ஏறி அந்தப் பெண்ணின் பின்னால் அமர்ந்தார். மேலும் படிக்க: அரசு பஸ்ஸை அலற வைத்த போதை பெண்: போலீசில் கதறிய பயணிகள்... சாந்தியை சாந்தப்படுத்த முடியாத திக் திக் நிமிடங்கள்!


பைக்கின் நடுவில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு சால்ட் லேக் பாதையில் வேண்டுமென்றே போலீசார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். போலீசார் அந்த பெண்ணை துன்புறுத்தியதால் அவரால் சத்தம் போடமுடியவில்லை. தன்னை பெலியாகட்டா - இஎம் பைபாஸில் இறக்கிவிடுமாறு அந்த பெண் போலீசாரிடம் கெஞ்சினார். இதன்பிறகு, போலீசார் பெண்ணை சாலையில் விட்டுவிட்டு, இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். 


இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பெண் தைரியத்தை வரவழைத்து கஸ்பா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்தப்புகாரில் அடிப்படையில், அபிசேக் மலகர்,  சந்தீப் குமார் பால் ஆகியோரை கஸ்பா போலீஸார் கைது செய்தனர்.


மேலும் படிக்க: சன் டிவி ஓனரு.. ஜெயலலிதா சொந்தக்காரர்.. ஜாக்குலினை சுகேஷ் நெருங்கியது எப்படி?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண