திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்த பிரதீப்(29) என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை போரூரில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அதே நிறுவனத்தில் ஐ.டி ஊழியராக வாணியப்படி திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த திவ்யா(26) என்பவரும் பணி புரிந்து வந்துள்ளார் ,அப்போது இருவரும் நட்பாக பழகியுள்ளனர், பிறகு காதலாக மாறியுள்ளது. நாளடைவில் இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தததாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பிரதீப்பிற்கு வீட்டு கடன் இருந்ததாகவும் இதனால் திவ்யா வங்கிகளில் கடன் பெற்று தவணை முறையில் 4,50,000 ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதீப்பை திருமணம் செய்து கொள்ளுமாறு திவ்யா அடிக்கடி கூறியதாகவும்,அதற்கு திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரதீப்பிடம் தன்னை ஏமாற்றுவதை அறிந்த திவ்யா தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது பிரதீப் பணத்தை தர முடியாது என கூறியுள்ளார். இந்த தகவலை அறிந்த ஐ.டி நிறுவனம் பிரதீப்பை பணியில் இருந்து நீக்கம் செய்தது. இதனால் பிரதீப் யாரிடமும் சொல்லாமல் தனது சொந்த ஊரான கொடைக்கானலுக்கு திரும்பியுள்ளார் , இதனை அறிந்த திவ்யா பிரதீப்பை தேடி கொடைக்கானலுக்கு வந்து பணத்தை கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திவ்யாவை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், பணத்தை திருப்பி தர முடியாது என கூறியும் அனுப்பிவிடுகிறார், இதனால் ஆத்திரமடைந்த திவ்யா கொடைக்கானல் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் பிரதீப் தன்னை ஏமாற்றியதாகவும், நம்பிக்கை மோசடி செய்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும் பிரதீப் மீது திவ்யா புகார் அளித்துள்ளார்,
இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பிரதீப் திவ்யாவை யார் என தெரியாது என்றும் பணம் யாரிடம் பெறவில்லை எனவும் கூறியுள்ளதை தொடர்ந்து கடந்த காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் சிறப்பு விசாரணைக்கு பிறகு பண பரிமாற்றத்திற்கான ஆதாரங்கள் இருந்ததும் பிரதீப் திவ்யாவிடம் ஏமாற்றி பணம் பெற்றதை ஒப்புக்கொண்டதாகவும் இதனை தொடர்ந்து பிரதீப் இளம்பெண்ணை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது,இதனையடுத்து பிரதீப் மீது மோசடி,பிறரை ஏமாற்றுதல்,உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அதிக கட்டண கொள்ளையில் ஈடுபடும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
கட்டண கொள்ளையில் ஈடுபடும் கொடைக்கானல் விடுதிகள் - கோட்டாட்சியர் கடும் எச்சரிக்கை