உள்ளாட்சி உள்ளது உள்ளபடி: ராணிப்பேட்டை
சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்று திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற கையோடு தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கட்சிகளின் பலம், பலவீனம் அறியும் தேர்தல் அல்ல. அதே நேரத்தில் மக்கள் யார் பக்கம் என்பதை எடை போடும் தேர்தல். ‛உள்ளாட்சியில் நல்லாட்சி’ என்கிற தாரகமந்திரத்தின் அடிப்படையில் இந்த தேர்தலை அரசியில் கட்சிகள் அவ்வளவு எளிதில் அனுகப்போவதில்லை. சில மாதங்களுக்கு முன் பொதுத்தேர்தலை சந்தித்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சில மாதங்களுக்கு முன் அங்கிருந்த மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? அங்கு எந்த கட்சி கோலோச்சியது? அங்கு அதிக ஓட்டு வாங்கிய கட்சி எது? என்பது குறித்து ஏபிபி நாடு ‛உள்ளாட்சி... உள்ளது உள்ளபடி‛ பகுதியில் பார்க்கலாம். அந்த வகையில் இன்று நாம் பார்ப்பது என்றும் பரபரப்பான வேலூர் மாவட்டம் பற்றி!
ராணிப்பேட்டை மாவட்டம்
வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அந்தந்த ஒன்றியங்கள் வாரியான வாக்காளர்கள் குறித்த விபரம் இதோ:
ஊராட்சி ஒன்றியங்கள் |
ஆற்காடு |
திமிரி |
வாலாஜா |
அரக்கோணம் |
காவேரிப்பாக்கம் |
நெமிலி |
சோளிங்கர் |
தொகுதி | ஆண் வாக்காளர் | பெண் வாக்காளர் | இதர வாக்காளர் |
அரக்கோணம்(தனி) | 1,10,327 | 1,16,167 | 17 |
சோளிங்கர் | 1,35,256 | 1,40,266 | 10 |
ராணிப்பேட்டை | 1,28,391 | 1,37,219 | 16 |
ஆற்காடு | 1,26,652 | 1,33,475 | 8 |
மாவட்ட மொத்த வாக்காளர்கள் விபரம்:
மாவட்டம் | மொத்தம் | ஆண்கள் | பெண்கள் | இதர |
ராணிப்பேட்டை | 10,27,804 | 5,00,626 | 5,27,127 | 51 |
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதோ அதன் விபரம்:
முதல் கட்ட தேர்தல் |
ஆற்காடு |
திமிரி |
வாலாஜா |
இரண்டாம் கட்ட தேர்தல் |
அரக்கோணம் |
காவேரிப்பாக்கம் |
நெமிலி |
சோளிங்கர் |
யாருக்கு பலம்....? ‛உள்ளது உள்ள படி’!
1.அரக்கோணம்(தனி)
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
ரவி | அதிமுக | 85,399 |
கெளதம சன்னா | விசிக(திமுக) | 58,230 |
பாஸ்கரன் | மக்கள் நீதி மய்யம் | 3,543 |
அபிராமி | நாம் தமிழர் | 14,631 |
மணிவண்ணன் | அமமுக |
4,777 |
அரக்கோணம் தனித் தொகுதியில் அதிமுகவின் வெற்றி குறிப்பிடும் படியாக இருந்தது. திமுக கூட்டணி கட்சியான விசிக.,வை 27,169 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது. இது பிற கட்சிகள் எதுவும் பெறாத அளவிலான வாக்கு எண்ணிக்கை ஆகும். நாம் தமிழர், மநீம, அமமுக ஓட்டுகளை கூட்டினாலும் வெற்றி வித்தியாசம் அதிகம் வருகிறது. அந்த வகையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்கு சாதகமான தொகுதியாக உள்ளது. வாக்கு விகிதத்திலும் அதிமுக கூட்டணி இங்கு முன்னிலையில் உள்ளது.
கூட்டணி | வாக்கு சதவீதம் |
திமுக | 33.97% |
அதிமுக | 49.82% |
மக்கள் நீதி மய்யம் | 2.07% |
அமமுக | 2.79% |
நாம் தமிழர் | 8.54% |
2.சோளிங்கர்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
முனிரெத்தினம் | காங்., (திமுக) | 110,228 |
கிருஷ்ணன் | பாமக(அதிமுக) | 83,530 |
ஜவஹர் | மக்கள் நீதி மய்யம் | 1,664 |
பாவேந்தன் | நாம் தமிழர் | 9,656 |
ராஜா | அமமுக |
12,979 |
சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 26,698 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக இங்கு தோல்வியை தழுவியது. வாக்கு வித்தியாசம், வேறு எந்த கட்சியும் பெற்ற வாக்குகளை விட அதிகம். அமமுக-நாம்தமிழர்-மநீம பெற்ற வாக்குகளை விட காங்கிரஸ் பெற்ற கூடுதல் வாக்குகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மற்ற தொகுதிகளில் இல்லாத அளவிற்கு இங்கு அமமுக அதிக ஓட்டுகளை பெற்றிருக்கிறது. அக்கட்சி 12,979 வாக்குகளை சோளிங்கரில் பதிவு செய்திருக்கிறது. இது அக்கட்சி பெற்ற அதிக பட்ச வாக்குகளில் ஒன்றாகும். இது அதிமுகவிற்கு பாதகமானதே.
கூட்டணி | வாக்கு சதவீதம் |
திமுக | 49.18% |
அதிமுக | 37.27% |
மக்கள் நீதி மய்யம் | 0.74% |
அமமுக | 5.79% |
நாம் தமிழர் | 4.31% |
3.ராணிப்பேட்டை
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
காந்தி | திமுக | 103,291 |
சுகுமார் | அதிமுக | 86,793 |
ஆதம் பாஷா | மக்கள் நீதி மய்யம் | 2,762 |
சைலஜா | நாம் தமிழர் | 10,234 |
வீரமணி | அமமுக |
637 |
ராணிப்பேட்டை தொகுதியில் மாவட்ட தலைநகர் என்கிற வகையில் அங்கு திமுக பெற்ற வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளரை விட 16,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அது வேறு எந்த கட்சியும் பெறாத வாக்குகளை விட அதிக வாக்குகள் ஆகும். மநீம-நாம்தமிழர்-அமமுக ஓட்டுகளை கூட்டினால் கூட அந்த எண்ணிக்கை வரவில்லை. நேரடியாக திமுக உடன் மோதிய அதிமுக இங்கு குறைந்த ஓட்டுகளையே பெற்றிருக்கிறது. இந்த தேர்தலிலும் அது எதிரொலிக்கலாம்.
கூட்டணி | வாக்கு சதவீதம் |
திமுக | 49.79% |
அதிமுக | 41.84% |
மக்கள் நீதி மய்யம் | 1.33% |
அமமுக | 0.31% |
நாம் தமிழர் | 4.93% |
4.ஆற்காடு
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
ஈஸ்வரப்பன் | திமுக | 103,885 |
இளவழகன் | பாமக(அதிமுக) | 83,927 |
முகமது ரஃபி | மக்கள் நீதி மய்யம் | 2,860 |
கதிரவன் | நாம் தமிழர் | 12,088 |
ஜனார்த்தனன் | அமமுக |
2,190 |
திமுக நேரயாக போட்டியிட்ட இங்கு அதிமுக கூட்டணியில் பாமகவை 19,958 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வெற்றி வித்தியாசத்திற்கு தேவையா வாக்குகளை வேறு எந்த கட்சியும் பெறவில்லை. நாம்தமிழர்-மநீம-அமமுக பெற்ற வாக்குகளை கூட்டினால் கூட வெற்றி வித்தியாசத்திற்கு தேவையான வாக்கு கிடைக்கவில்லை. அந்த அளவிற்கு திமுக கூட்டணி பலமாக உள்ளது. இங்கு அமமுக மற்றம் மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்குகள் மிக மிக குறைவு. அதே நேரத்தில் நேரத்தில் நாம் தமிழர் கணிசமான வாக்குகளை பெற்றிருக்கிறது. எனவே அதிமுக-திமுக-நாம் தமிழர் இடையே தான் போட்டி இருக்கும்.
கூட்டணி | வாக்கு சதவீதம் |
திமுக | 49.52% |
அதிமுக | 40.01% |
மக்கள் நீதி மய்யம் | 1.36% |
அமமுக | 1.04% |
நாம் தமிழர் | 5.76% |
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்சிகளின் பலம்... பலவீனம் என்ன...?
கட்சி | பலம் | பலவீனம் |
திமுக |
கே.சி.வீரமணி ரெய்டு கூட்டணி தொடர்கிறது ஏற்கனவே பெற்ற வெற்றி ஆளுங்கட்சி என்கிற சாதகம் குறுகிய காலத்தில் ஆட்சிக்கு கிடைத்த நற்பெயர் பண பலம் |
அதிமுகவிற்கு கிடைத்த வாக்குகள் அதிமுகவின் ஒரு தொகுதி வெற்றி அதிமுக வாக்கு சதவீதம் கூட்டணி பங்கீடு விஜய் மக்கள் இயக்கம் |
அதிமுக |
கடந்த கால வாக்கு விகிதம் கைவசம் ஒரு வெற்றி பண பலம் |
கே.சி.வீரமணி ரெய்டு நீக்கப்பட்ட நிர்வாகிகள் பாமக கூட்டணி வெளியேற்றம் நாம் தமிழர் வாக்குகள் எதிர்கட்சியாக தேர்தல் சந்திப்பு அமமுக ஓட்டுகள் விஜய் மக்கம் இயக்கம் |
நாம் தமிழர் |
சட்டமன்றத்தில் கிடைத்த வாக்குகள் சீரான வாக்கு விகிதம் கூட்டணி இல்லாதது |
உள்ளூர் செல்வாக்கு இல்லாத வேட்பாளர்கள் பண பலம் மாவட்டத்தில் முன்னெடுக்கும் தலைமை |
மக்கள் நீதி மய்யம் |
கமல் என்கிற அடையாளம் |
மிகக்குறைவான வாக்கு விகிதம் கட்சியில் ஏற்பட்ட பிளவு மாவட்டத்தில் முன்னேடுக்கும் தலைமை பண பலம் |