வரதட்சனை கொடுமை

 

கேரளா மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித் ஜோசப் (28). இவர் மீது இவருடைய மனைவி கடந்த ஆண்டு மானந்தவாடி போலீஸ் நிலையத்தில் வரதட்சனை கொடுமை புகார் அளித்தார். இதையடுத்து  போலீசார் வரதட்சனை கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அஜித் ஜோசப்பை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால், அஜித் ஜோசப் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார். இந்த தகவல் கேரள போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து வயநாடு போலீஸ் சூப்பிரண்டு, அஜித் ஜோசப்பை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி.  போட்டு வைக்கப்பட்டிருந்தது. 

 

ஒரு அறையில் அடைத்து 

 

இந்த நிலையில் நேற்று இரவு துபாயிலிருந்து, ஃப்ளை துபாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை  சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அதே விமானத்தில் கேரள போலீசாரால்  தேடப்படும், தலைமறை குற்றவாளியான அஜித் ஜோசப்பும் வந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடி உரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் ஆய்வு செய்தபோது, இவர் வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்தது.

 

இதையடுத்து அவரை வெளியிடாமல், ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு கேரள போலீசுக்கும் ஓராண்டு  தலைமறைவாக இருந்த, தேடப்படும் குற்றவாளி அஜித் ஜோசப், சென்னை விமான நிலையத்தில் சிக்கி இருக்கிறார் என்ற தகவலை அனுப்பினர்.  இதையடுத்து கேரளாவில் இருந்து தனிப்படை போலீசார் சென்னை வந்து கொண்டு இருக்கின்றனர். இதை அடுத்து குடியுரிமை அதிகாரிகள், கேரள மாநில தனிப்படை போலீசார் வரும் வரையில், அஜித் ஜோசப்பை பாதுகாப்பாக வைப்பதற்காக, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 



Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண