மத்திய நிதியமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், சென்னையில் சனிக்கிழமை முழு நாள் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் முடிந்து மயிலாப்பூர் காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்கியுள்ளார்.
மயிலாப்பூர் மார்க்கெட்டில் நிர்மலா சீதாராமன்
சென்னைக்கு வந்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அன்றைய நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு மயிலாப்பூர் மார்கெட்டிற்கு சென்றார். மார்கெட்டிற்கு சென்ற அவர் காய்கறி விற்கும் விற்பனையாளர்களுடன் சகஜமாக பேசினார். தொடக்கத்தில் அவரை அங்கிருந்த விற்பனையாளர்களுக்கும், மக்களுக்கும் அடையாளம் தெரியவில்லை. பின்னர்தான் அவர்களுக்கு அது மத்திய அமைச்சர் என்று தெரிந்தது.
காய்கறி விற்பனை, கொள்முதல், விலை தொடர்பாக அவர்கள் என்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறார் என்பதை அறிவதற்காக அவர்களிடம் மத்திய அமைச்சர் பேசி தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை நிர்மலா சீதாராமனின் அதிகாரப்பூர்வ அலுவலக ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் பதிவு
அந்த பதிவில், "சென்னைக்கு தனது நாள் நீண்ட பயணத்தின் போது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மயிலாப்பூர் சந்தைக்கு சென்றார், அங்கு அவர் விற்பனையாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுடன் உரையாடினார். அங்கு காய்கறிகள் வாங்கினார்," என்று எழுதப்பட்டு இருந்தது.
அடுத்து மளிகை கடை
சிறிது நேரம் கழித்து, நிர்மலா சீதாராமன், ஒரு கூடை நிறைய ஃப்ரெஷ்ஷான காய்கறிகளை தானே சேகரித்து வாங்கிக் கொண்டு அடுத்ததாக மளிகை கடைக்குச் சென்றார். மத்திய அமைச்சர் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று கொள்முதல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கமெண்ட்ஸ்
இதன் கமெண்ட் செக்ஷன் நிரம்பி வழிந்தது. ஒரு ட்விட்டர் பயனர், "மேடம், நடுத்தர வர்க்க வருமான வரி செலுத்துபவர்களுடனும் சில சமயங்களில் தொடர்பு கொள்ளுங்கள். வீட்டுக் கடன் விலக்குகள் போன்று சாதாரண EMI களுக்கு இல்லை! EMI களுக்குச் செல்லும் வருமானத்திற்கும் சேர்த்து நாங்கள் வரி செலுத்துகிறோம்!", என்றார்.
மற்றொரு பயனர் கூறினார், "காய்கறி வாங்கிவிட்டு பணம் செலுத்துவதை பார்க்க நான் ஆர்வமாக இருந்தேன். டிஜிட்டலா? அல்லது பணமா? க்ளைமாக்ஸ் மட்டும் இல்லையே", என்றார். மற்றொரு பயனர் கூறினார், "மக்கள் உயர் அலுவலகங்களை, உயர் பதவிகளை அடையும் போது, அவர்களை வாழ்க்கையின் கிடைக்கும் சிறிய சந்தோஷங்களை இழக்கிறார்கள்.... என்றாவது ஒரு திரைப்படம், உடுப்பி ஹோட்டலில் ஒரு தோசை, ஒரு ஐஸ்கிரீம், ஷாப்பிங். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை இழக்கிறார்கள்", என்று பதிவிட்டுள்ளார்.