கேரளா: மனைவி மற்றும் மகளை எரித்து கொன்று கணவன் தற்கொலை


கேரளா மாநிலம் மலப்புரம் அருகே மனைவி மற்றும் மகளை எரித்து கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மனைவி, மகள்கள்:


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தலமன்னா கிராமத்தைச் சேர்ந்தவர்  முகமது. அவருக்கு மனைவியின் 11 வயது மற்றும் 5 வயது உள்ளிட்ட மூன்று மகள்கள் உள்ளதாக கருதப்படுகிறது. முகமது 2020-ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் இருந்துள்ளார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.


சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு:


போக்சோ வழக்கில் குற்றவாளியான முகமது, வியாழக்கிழமை அவரது மனைவி மற்றும் 11 வயது மகள் மற்றும் 5 வயது மகள் ஆகியோரை ஆட்டோ ரிக்சாவின் உள்ளே அமர்த்தி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். அதையடுத்து முகம்மதுவும் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்,இந்நிலையில் அவரது மனைவி மற்றும் 11 வயது மகள் நெருப்பில் முற்றிலுமாக எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த வீட்டின் அருகாமையில் உள்ளவர்கள் 5 வயது  மகளை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின் சிறிது நேரத்திற்கு பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆட்டோ ரிக்சாவில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஆட்டோ ரிக்சா முழுமையாக எரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவத்தை பார்த்தவர்கள்:


அக்கம் பக்கத்தினர் கூறுகையில், அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்ததில் ஆட்டோ ரிக்சா எரிவதை பார்த்தோம். அருகே சென்ற போது அதில் இருந்த முகமது திடீரென கிணற்றுள் குதித்து விட்டார். மேலும் ஆட்டோ ரிக்சாவின் அருகே செல்லும்போது திடீரென வெடித்தது.பின்னர் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சி செய்தோம். ஆனால் அதற்குள் முகமது மனைவி மற்றும் அவரது மகள் நெருப்பில் எரிந்து உயிரிழந்தனர்.நெருப்பு எரிய ஆரம்பித்த போதே, 5 வயது மகளை ஆட்டோவிலிருந்து அவரது சகோதரி வெளியே தள்ளிவிட்டதால் அவர் உயிரோடு உள்ளார்.எனினும் காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்.


காவல்துறை:


 சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தினர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் முகமது என்பவர் ஏற்கனவே  போக்சோ வழக்கில் கைது செய்ய்ப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர். இவர் ஆட்டோ ரிக்சாவில்  3 பேரையும் அடைத்து பெட்ரோல் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை வைத்து நெருப்பு வைத்திருக்கலாம்.மேலும் ஆட்டோ ரிக்ஷாவில் வெடி பொருட்களையும் வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என மலப்புரம் காவல்துறையினர் தெரிவித்தனர்.