ஓராண்டு ஆட்சி நிறைவையொட்டி, சென்னையில் அரசுப்பேருந்தில் ஏறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திமுக ஆட்சி ஒராண்டு ஆனதையொட்டி கருணாநிதி படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடமும் முதலமைச்சர் வாழ்த்து பெற்றார். இதனைத்தொடர்ந்து, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்.கே.சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்போது, திடீரென்று காரை நிறுத்தி மாநகர பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார். பேருந்தில் பயணிகளோடு பயணியாக நின்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கோரிக்கைகளை கேட்டறிந்த முதலமைச்சரிடம் வெள்ளை போர்டு பேருந்துகள் குறைவாக இருப்பதாக பெண் கூறினார்கள். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பின்னர், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து, திமுக ஆட்சி ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு சாதனை புத்தகத்தை வெளியிட்டார். திமுக ஆட்சியில் மாதம் தோறும் செய்த சாதனைகளை 12 புத்தகங்களாக வெளியிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்