கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கும் தீபிகா என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுது. இவர்களுக்கு இரண்டரை வயதில் அழகிய குழந்தை உள்ளது. இந்த நிலையில், நேற்று அவினாஷ் தனது இரண்டரை வயது குழந்தையை தூக்கி கொஞ்சியுள்ளார்.


அப்போது, தனது குழந்தைக்கு அவினாஷ் முத்தம் கொடுத்துள்ளார். அப்போது, அவினாஷ் பல் துலக்காமல் இருந்துள்ளார். அவினாஷ் பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் தீபிகா கோபம் அடைந்துள்ளார். குழந்தைக்கு பல் துலக்காமலா முத்தம் கொடுப்பது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.




இதனால், அவினாஷிற்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீபிகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தீபிகாவிற்கும், அவினாஷிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. வாக்குவாதத்தின்போது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவினாஷ் அருகில் இருந்த கத்தியை எடுத்து, மனைவி என்றும் பாராமல் தீபிகாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், தீபிகா அலறியுள்ளார்.


திடீரென தீபிகாவின் அலறல் சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் பதறியடித்து அவினாஷின் வீட்டிற்குள் வந்து பார்த்தனர். அப்போது, தீபிகா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். உடனே, தீபிகாவை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.




இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து அவினாஷை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் அவினாஷிடம் விசாரணை செய்து வருகின்றனர். அவினாஷ் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். அவர் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பாலக்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மனைவியை கணவனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.


இந்த கொலைக்கு சம்பவத்தன்று நடைபெற்ற சண்டைதான் காரணமா? அல்லது கணவன் மனைவி இடையே நீண்ட நாட்கள் மனஸ்தாபம் ஏதும் இருந்துவந்ததா? அவினாஷ் திட்டமிட்டு இந்த கொலையை செய்தாரா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 


மேலும் படிக்க : நாகர்கோவில்: வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை கொள்ளை; கண்டுபிடிக்காமல் இருக்க திருடர்கள் செய்த காரியம்..!


மேலும் படிக்க : குமரியில் காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்ற இளைஞர் மர்ம மரணம் - நடந்தது என்ன..?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண