பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இடையே, அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தபோது மட்டும் ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகினார். அவருக்கு பதில், நடிகர் சிம்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கிறார்.


ஏற்கனவே, சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக சிம்பு பங்கேற்றிருக்கிறார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, முதல் முறையாக தொகுத்து வழங்க இருக்கிறார். இன்று முதல் சிம்பு பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் சிம்பு பங்கேற்கும் எபிசோடின் ப்ரொமோ வெளியாகி உள்ளது. அதில், “வந்தாச்சு... செலிபிரேஷன் ஆரம்பிக்கலாமா?” எப சிம்பு கேட்க, ரசிகர்கள் பலத்த வரவேற்பு அளித்துள்ளனர்.






தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் பல அல்டிமேட்டான சம்பவங்கள் நடைபெற்று களைகட்டிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களுக்கு முழு நேர ட்ரீட்டாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவது தொடர்பான ப்ரோமோ வைரலானது. ப்ரோமில் வரும் சிம்பு, எதிர்பார்கலல? என ரசிகர்களிடம் கேள்வி எழுப்புகிறார் சிம்பு. சில நொடிகள் கழித்து நானே எதிர்பார்க்கல எனச்சொல்லி சிரிக்கிறார் சிம்பு. புது தொகுப்பாளர் நிகழ்ச்சியை எப்படி கொண்ட செல்ல போகிறார் என பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.


மீதம் இருக்கும் ஐந்து வாரங்களுக்கான நிகழ்ச்சியை, ஒவ்வொரு வார இறுதியிலும் தொகுத்து வழங்க இருக்கிறார் சிம்பு. இந்நிலையில், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் 1 கோடி ரூபாய் என இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக மொத்தம் 5 முதல் 6 கோடி ரூபாய் சிம்புவுக்கு வழங்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண