கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில், ஜூனியர் மாணவர்களை பல மாதங்களாக கொடூரமான ராக்கிங்கிற்கு உட்படுத்தியதாக ஐந்து சீனியர் நர்சிங் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முதலாம் ஆண்டு மாணவர்கள் தாங்கள் அனுபவித்த கொடூரமான துஷ்பிரயோகத்தை விவரிக்கும் புகாரை கோட்டயம் காந்திநகர் போலீசார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
மாணவர்கள் கைது:
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாமுவேல் ஜான்சன் (20), ஜீவா என்எஸ் (19), ராகுல் ராஜ் கேபி (22), ரிஜில்ஜித் சி (21) மற்றும் விவேக் என்வி (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பொது நர்சிங் மாணவர்கள். புகாரின்படி, ராகிங் நவம்பர் 2023 இல் தொடங்கி, உடல் மற்றும் உளவியல் ரீதியான சித்திரவதைகளின் உச்சகட்ட அளவிற்கு அதிகரித்ததாக, மனோரமாவில் செய்தி வெளியாகியுள்ளது.
பல மாதங்களாக நடந்த கொடுமை:
பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில், சீனியர் மாணவர்கள் தங்கள் ஆடைகளை கழற்றி, அவர்களின் அந்தரங்கப் பகுதிகளில் டம்பல்ஸை கட்டி வைத்து, திசைகாட்டி( Compass) மற்றும் பிற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தி காயங்களை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டினர். சீனியர் மாணவர்கள் காயங்களில் லோஷனை ஊற்றி, ஜூனியர்களை முகம், தலை மற்றும் வாயில் கிரீம் தடவ கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த கல்லூரியின் ஆண்கள் விடுதியில்தான் இந்த ராகிங் கொடுமை அரங்கேறியுள்ளது, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் அவமானம் மற்றும் வன்முறைக்கு ஆளானார்கள்.
உடல் ரீதியான துன்புறுத்தலுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மது வாங்குவதற்காக ஜூனியர்களிடம் சீனியர்கள் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூனியர்களில் ஒருவர் பணம் கொடுக்க மறுத்ததற்காக சீனியர் மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். இதன் பிறகு தான் பாதிக்கப்பட்ட மாணவர்களை தங்கள் பெற்றோருக்குத் தெரிவித்தனர் பின்னர் அவர்கள் காவல்துறையை தொடர்புக்கொண்டு புகார் அளித்தனர்
புகாரைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களை இடைநீக்கம் செய்தார், மேலும் 2011 ஆம் ஆண்டு ராகிங் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறை அவர்களைக் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தொடரும் சீல் வைக்கும் நடவடிக்கை - 10 மதுபான பார்களுக்கு சீல் வைத்து டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை...!
விழிப்புணர்வு வேண்டும்:
இந்திய கல்லூரிகளில் நீண்டகாலப் பிரச்சினையான ராகிங், பல ஆண்டுகளாகத் தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன, இதை தடுக்க இது வலுவான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களின் செய்ய வேண்டிய அவசியத்தை இச்சம்வங்கள் எடுத்துக்காட்டுகிறது.