கேரளத்தில் கலர் ஜூன்ஸ் பேண்ட் அணிவது போல அதனுள் சுமார் ரூ.14 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தியவர்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் வசமாக சிக்கிக்கொண்டனர்.


சூர்யா நடித்த அயன் படத்தினைப்பார்த்தப்போது அய்யோ… இப்படியும் தங்கத்தினைக் கடத்துவார்களா? என வியந்துப் பார்த்தோம். குறிப்பாக ஆசன வாயில் மறைத்து  வைத்துத் தங்கம் கடத்தல், உள்ளக்கால்களில் மறைக்கப்பட்டு, வாட்டர் பாட்டில்களில் வைத்து, உள்ளாடைகளில் மறைத்து என பல்வேறு வழிகளில் தற்போது தங்கக்கடத்தல் அரங்கேறி வருகிறது. பொதுவாக பல்வேறு நாடுகளிலிருந்து கணக்கில் வராத தங்கத்தினைக் கடத்தி வருவதாக வரும் புகார்களையடுத்து விமானநிலையத்தில் சுங்க வரித்துறைகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் சமீப காலங்களாக விமான நிலையத்தில் கடத்தப்படும் தங்கத்தினை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.





இப்படி ஒரு நிகழ்வு தான்,ஆனால் முற்றிலும் வித்தியாசமாக யோசித்து கேரளா மாநிலம் கன்னூர் விமானநிலையத்தில் தங்கத்தினைக் கடத்த முயன்றுள்ளனர். எப்படி தெரியுமா?தற்போது தான் கலர் கலராக ஜூன்ஸ் பேண்ட்களை மக்கள் பயன்படுத்துவதால் இதன் மூலம் கடத்தினால் எந்தவித சந்தேகமும் ஏற்படாது.  எனவே இரட்டை லேயர்களைக்கொண்ட பேண்டில் மஞ்சள் நிற கலர் இருப்பது போல் தங்க பேஸ்டை பேண்ட் முழுவதும் தடவி இருந்தனர். வித்தியாசமாக இருப்பதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சோதனை செய்துப் பார்த்தப்போது சுமார் 302 கிலோ மதிப்பிலான தங்கத்தினைக் கடத்திவந்தது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 14 லட்ச ரூபாய் என சுங்கவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து கடத்தப்பட்டத் தங்கத்தினைக் அதிகாரிகள் கைப்பற்றினார்.


 






 










இந்நிலையில் இந்தப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதையடுத்து, பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன. குறிப்பாக இதுப்போன்ற வழக்குகளைப் பார்க்கும் போது, நான் கேரளத்தில் சுங்க வரித்துறை அதிகாரியாக இருக்க விரும்புகிறேன் எனவும், தங்கம் ஒரு உலோகம் என்பதால் நிச்சயம் எப்படியாவது மாட்டிக்கொள்வோம் தம்பி என்று கேளிக்கையாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.