கேரள திரைப்பட இயக்குனர் லிஜு கிருஷ்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மலையாளத்தில் உருவாகி வரும் படவெட்டு படத்தின் இயக்குனர் லிஜு கிருஷ்ணா, பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் பேரில் கேரளாவின் கண்ணூரில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
“லிஜு கிருஷ்ணா ஐபிசி 376 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். புகார் அளித்தவரின் எந்த விவரங்களையும் எங்களால் வெளியிட முடியாது. ஆனால் அவர் சினிமா துறையைச் சேர்ந்தவர் அல்ல. மாறாக, அவருக்கு நன்கு தெரிந்தவர்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
அறிமுக இயக்குனர் கொச்சியில் உள்ள மாஜிஸ்திரேட் முன்பு இன்று ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் அவரது படம், 'படவெட்டு', மலையாள நட்சத்திரங்கள் மஞ்சு வாரியர் மற்றும் நிவின் பாலி உட்பட பலர் நடித்துள்ளனர். கிருஷ்ணா கைது செய்யப்பட்டபோது, அவரது சொந்த ஊரான கண்ணூரில் படவெட்டு படப்பிடிப்பில் இருந்தார். இளம் இயக்குநர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கொச்சியைச் சேர்ந்த பிரபல டாட்டூ ஆர்ட்டிஸ்ட் சுஜீஷ் பிஎஸ், பாலியல் வன்கொடுமை மற்றும் மானபங்கம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கேரள காவல்துறையால் நேற்ற் கைது செய்யப்பட்டார்.
குறைந்தது 6 பெண்களின் புகார்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது, அவர்கள் அனைவரும் அவரது முன்னாள் வாடிக்கையாளர்களாக இருந்தனர். அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
18 வயது இளம்பெண், கலைஞரின் டாட்டூ ஸ்டுடியோவில் - இன்க்ஃபெக்டட் டாட்டூ ஸ்டுடியோவில், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து புகார்கள் வந்தன. அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்